
ஆடம்பர நாயகன் சுக்கிரன் மார்ச் 1 முதல் தனது உச்ச வீடான மீன ராசிக்குள் நுழையப்போகிறார். கும்பத்தில் இருந்து மீனம் செல்லும் இந்த இடமாற்றம் சில ராசிகளின் தலையெழுத்தையே மாற்றி எழுதப்போகுது. அடுத்த ரெண்டு மாசத்துக்கு மகாலட்சுமியின் அருள் இவங்களுக்கு முழுசா கிடைக்கும். கையில் காசு புரளும், காதலில் இனிமை கூடும், நினைச்சதெல்லாம் நடக்கும்! குறிப்பாக ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம் மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு யோகமான காலம் ஆரம்பம். இவங்க வாழ்க்கை இனி 'ராயல்' ஸ்டைல் தான்.
ரிஷப ராசி நேயர்களே, உங்க ராசிநாதன் சுக்கிரன் இப்போ செம ஸ்ட்ராங்கான இடத்துல இருக்காரு! வர்ற ரெண்டு மாசத்துக்கு நீங்கதாங்க 'கிங்'. வேலையில புரமோஷன், பிசினஸ்ல லாபம்னு வருமானம் பல வழிகள்ல வந்து உங்க பாக்கெட்டை நிரப்பப்போகுது. நீங்க எதைச் செஞ்சாலும் அதுல வெற்றி நிச்சயம். கைநிறைய சம்பளம், எதிர்பாராத சலுகைகள்னு வசதிகள் பெருகும். பெரிய பெரிய விஐபி-க்களோட நட்பு கிடைச்சு, உங்க அந்தஸ்தே மாறப்போகுது. மொத்தத்துல இது நீங்க இன்பங்களை அள்ளி அனுபவிக்கப்போற பொற்காலம்.
மிதுன ராசி நேயர்களே, உங்க ராசிக்கு 10-ம் இடத்துல சுக்கிரன் வந்து அமர்றதால, இனி உங்க பாக்கெட் எப்பவும் 'ஃபுல்'லா தான் இருக்கும்! பணத் தட்டுப்பாடுங்கிற பேச்சுகே இனி இடமில்லை. லவ் பண்றவங்களுக்குக் காதல் கைகூடும், கல்யாணமானவங்களுக்குத் தாம்பத்தியம் இனிக்கும். அடிக்கடி டூர் போறது, பிடிச்சதை வாங்குறதுன்னு ஆடம்பர வாழ்க்கை உங்களைத் தேடி வரும். மனசுல ரொம்ப நாளா இருந்த ஆசைகள் ஒவ்வொண்ணா நிறைவேறும். வீட்ல விசேஷ சத்தம் கேட்கப்போற நேரம் இது. மார்ச் மாசம் முழுக்க நீங்கதான் 'ஹேப்பி அண்ணாச்சி'!
கன்னி ராசி நேயர்களே, உங்களுக்குப் பிடிச்ச கிரகமான சுக்கிரன் இப்போ சாதகமான இடத்துக்கு வர்றாரு! இனி உங்க வருமானம் சும்மா ராக்கெட் வேகத்துல ஏறும். கையில காசு புரளும், சொத்து சேர்க்கை தானா அமையும். முக்கியமா, முன்னோர்களோட சொத்து கைக்கு வந்து சேர்றதுக்கு அதிக வாய்ப்பு இருக்கு. ஆபீஸ்ல உங்க கெத்து கூடும், சம்பள உயர்வு கன்பார்ம்! பிசினஸ் பண்றவங்களுக்கு "மூணு பூவும் ஆறு காயும்" கணக்கா லாபம் கொட்டும். பெரிய மனிதர்களோட பழக்கம் கிடைச்சு உங்க அந்தஸ்தே வேற லெவலுக்குப் போகப்போகுது. என்ஜாய் பண்ணுங்க
துலாம் ராசி நேயர்களே, உங்க ராசிநாதன் சுக்கிரன் இப்போ செம ஸ்ட்ராங்கான பொசிஷனுக்கு வர்றாரு! ஆபீஸ்ல நீங்க எதிர்பார்த்த அந்தப் பதவி உயர்வும், சம்பள உயர்வும் இப்போ தானா தேடி வரும். பிசினஸ் பண்றவங்களுக்கு லாபம் சும்மா டபுளா கொட்டும். ரொம்ப நாளா மண்டையை பிடிச்சுக்கிட்டு இருந்த பணப் பிரச்சனை, பர்சனல் பிரச்சனை எல்லாம் இப்போ "டாட்டா" காட்டிட்டு போயிடும். வருமானம் பல வழிகள்ல வந்து உங்க பேங்க் பேலன்ஸை உயர்த்தப்போகுது. பெரிய பெரிய செல்வாக்குள்ள மனுஷங்களோட நட்பு கிடைச்சு, உங்க லைஃப் ஸ்டைலே டோட்டலா மாறப்போகுது. இனி நீங்கதான் 'ரியல் ஸ்டார்
விருச்சிக ராசி நேயர்களே, உங்க ராசிக்கு 4 மற்றும் 5-ம் இடத்துல சுக்கிரன் வர்றது சும்மா சாதாரண விஷயம் இல்லைங்க! சொல்லாத இடத்துல இருந்து திடீர்னு பணம் வந்து கொட்டப்போகுது. முக்கியமா 'ஃபாரீன்' பணம் அல்லது வெளிநாட்டுத் தொடர்புகள் மூலமா லாபம் கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கு. மகாலட்சுமியோட அருள் முழுசா இருக்கறதால, கார், பங்களா, ஆடம்பர வாழ்க்கைன்னு உங்க லெவலே மாறப்போகுது. மனசுக்குள்ள புதைச்சு வச்சிருந்த ஆசைகள் எல்லாம் இப்போ நிறைவேறும். பெரிய விஐபி-க்களோட பழக்கம் கிடைக்கும். ஆனா ஒரு சின்ன அலர்ட்.. தேவையில்லாத சில தொடர்புகளும் வரலாம், அங்க மட்டும் கொஞ்சம் உஷாரா இருங்க
மகர ராசி நேயர்களே, உங்க ராசிக்கு சுக்கிரன் கொடுக்கப்போறது சும்மா சாதாரணமான பலன் இல்லைங்க, ஒரு 'மெகா ஜாக்பாட்'! வருமானம் மற்றும் ஆரோக்கியத்தில் இருந்த சின்ன சின்ன சிக்கல்கள் எல்லாம் காணாமல் போகப்போகுது. ஆபீஸ்ல சம்பள உயர்வு, பிசினஸ்ல அதிரடி லாபம்னு உங்க பேங்க் பேலன்ஸ் எகிறப்போகுது. இதுல இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னன்னா, வசதியான குடும்பத்துல இருந்து ஒருத்தர் உங்க வாழ்க்கையில லவ்வராகவோ அல்லது பார்ட்னராகவோ வர வாய்ப்பு இருக்கு. வாழ்க்கை முறை அப்படியே டோட்டலா மாறி, ஆடம்பரத்தோட உச்சாணிக் கிளைக்கே போகப்போறீங்க. இனி உங்க கையில தேவைக்கு அதிகமாவே காசு புரளும்