Made for each other Zodiac signs : ஜோதிட சாஸ்திரப்படி சில ராசிகள் ஒண்ணா இணைஞ்சா, அங்க காதலுக்கும் மகிழ்ச்சிக்கும் பஞ்சமே இருக்காது. அப்படி ஒருத்தருக்காக ஒருத்தர் பிறந்த அந்த "பக்கா மேட்ச்" ராசிகள் எவை? உங்க பார்ட்னர் ராசி இந்த லிஸ்ட்ல இருக்கா?
மேஷம் + தனுசு - இந்த ஜோடியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது
மேஷமும் தனுசும் இணைந்தால் 'பவர்ஃபுல்' நெருப்புப் பிழம்பு! இருவருமே உற்சாகத்தின் ஊற்றுகள், சாகசத்தின் காதலர்கள். வாழ்க்கையை ஒரு த்ரில்லர் சினிமா போல வாழ நினைப்பவர்கள். இவர்களது காதலில் வேகம் இருக்கும், அதைவிட அதிக விவேகம் இருக்கும். "என்னை கட்டுப்படுத்தாதே" என்று நினைக்கும் இருவருமே, ஒருவருக்கொருவர் சுதந்திரத்தைக் கொடுத்து அழகு பார்ப்பார்கள். இவர்களது கூட்டுப் பயணங்களும், புதுப்புது தேடல்களும் இந்த உறவை ஒருபோதும் சலிப்படையச் செய்யாது.
25
ரிஷபம் + கடகம்: அன்பால் கட்டப்பட்ட அழகான கூண்டு:
நீரும், நிலமும் சேர்ந்தால் எப்படி செழுமை உண்டாகுமோ, அப்படித்தான் இந்த ரிஷபம் - கடகம் ஜோடியும். ரிஷபம் உறுதியையும் பாதுகாப்பையும் தர, கடகம் தன் அன்பால் அந்த உறவில் உணர்ச்சிகளை நிரப்புகிறது. இவர்களுக்கு 'வீடு' தான் உலகம். ஒருத்தருக்கு ஒருத்தர் பார்த்துப் பார்த்து கவனிச்சுக்கிறதில் இவங்கதான் 'நம்பர் 1'. விட்டுக்கொடுக்காத விசுவாசமும், மாறாத அர்ப்பணிப்பும் இவங்க உறவை காலத்துக்கும் அழியாத காவியமா மாத்திடும். நிம்மதியான வாழ்க்கைக்கு இந்த ஜோடி ஒரு சிறந்த உதாரணம்.
35
மிதுனம் + துலாம் - இந்த ஜோடி ஒரு 'இன்டலெக்சுவல்' பவர் ஹவுஸ்
காற்றில் மிதக்கும் 2 ராசிகள் இணைந்தால் அங்க ஐடியாஸுக்கும், அரட்டைக்கும் பஞ்சமே இருக்காது. மிதுனத்தின் கலகலப்பான பேச்சும், துலாம் ராசியின் பக்குவமான அணுகுமுறையும் சேர்ந்தால் அது ஒரு 'பெர்ஃபெக்ட் காம்போ'. இவங்க ரெண்டு பேருக்கும் இடையில ரகசியம் என்கிறதே இருக்காது; மனசுல இருக்கிறதை அப்படியே ஷேர் பண்ணிப்பாங்க. மிதுனம் கொஞ்சம் துள்ளிக் குதிச்சாலும், துலாம் அதை அழகா பேலன்ஸ் பண்ணி ஒரு ஸ்மூத்தான லைஃப் கொடுப்பாங்க. இவங்க வீடு எப்போதுமே சிரிப்புச் சத்தத்தாலயும், உருப்படியான விவாதங்களாலயும் நிறைஞ்சு இருக்கும்.
45
இரட்டை சிங்கங்களின் சங்கமம்! சிம்மம் + சிம்மம் - இது காதலை விட ஒரு பெரிய சாம்ராஜ்யம்
பொதுவாக ஒரே ராசினா முட்டிக்கிக்கும்னு சொல்லுவாங்க, ஆனா சிம்மத்துக்கு மட்டும் அது விதிவிலக்கு! ரெண்டு சிங்கங்கள் ஒண்ணா சேர்ந்தா அந்த இடமே அதிரும்ல? அதே கெத்துதான் இந்த ஜோடிக்கும். ரெண்டு பேருக்குமே சாதிக்கணும்ங்கிற வெறி, கலை ஆர்வம், அப்புறம் மத்தவங்க பாராட்டணும்ங்கிற ஆசை ரத்தத்துலயே இருக்கும். இவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டியாளரா இல்லாம, ஒருத்தருக்கு ஒருத்தர் மிகப்பெரிய 'ஃபேன்' ஆக மாறிடுவாங்க. ஒருத்தர் ஜெயிச்சா இன்னொருத்தர் விசில் அடிச்சு கொண்டாடுவாங்க. பொறாமைக்கு இங்க வேலையே இல்லை; ஏன்னா ரெண்டு பேரும் சேர்ந்து உலகத்தையே ஜெயிக்கப் பிறந்தவங்க!
வாழ்க்கை ஒரு 'சக்சஸ் ஸ்டோரி' தான். கனவு மட்டும் காணாம, அதை எப்படி நிஜமாக்கணும்னு பிளான் போடுறதுல இவங்கதான் கில்லாடி. இவங்களை ஒரு 'வொர்க்கஹாலிக் ஜோடி'ன்னே சொல்லலாம். கன்னி ராசியின் நுணுக்கமான அறிவும், மகரத்தின் அசாத்திய உழைப்பும் ஒண்ணா சேரும்போது, இவங்க தொடாத உயரமே இல்லை. ஒருத்தருக்கு ஒருத்தர் ஏணியா இருந்து வாழ்க்கையோட சவால்களை அசால்ட்டா டீல் பண்ணுவாங்க. இவங்க காதல்ல ரொமான்ஸை விட ஒருத்தருக்கு ஒருத்தர் கொடுக்கிற 'சப்போர்ட்' தான் ரொம்ப ஸ்ட்ராங் என்பது குறிப்பிடத்தக்கது.