ஜனவரி 12, 2026 அன்று சுக்கிர பகவான் சனி பகவானின் சொந்த ராசியான மகரத்தில் குடியேற இருக்கிறார். இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்களுக்கு அசுப பலன்கள் கிடைக்கக்கூடும். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Venus Transit in Capricorn List of Unlucky Zodiac Signs
ஜோதிடத்தில் சுக்கிர பகவான் சுப கிரகமாக அறியப்படுகிறார். இவர் மகிழ்ச்சி, செல்வம், பொன், பொருள், ஆடம்பரம் ஆகியவற்றின் காரகராவார். தற்போது தனுசு ராசியில் பயணித்து வரும் அவர் ஜனவரி 12ஆம் தேதி சனி பகவானின் சொந்த ராசியான மகரத்தில் குடியேற இருக்கிறார். சுக்கிரனின் மகர ராசி பெயர்ச்சி என்பது சில ராசிக்காரர்களுக்கு நிதி சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும். திடீர் நிதி இழப்புகள் அல்லது பொருளாதார நெருக்கடிகளை இந்த ராசிகள் சந்திக்க நேரிடலாம் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
25
மேஷம்
மகர ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி நடக்கும் பொழுது மேஷ ராசிக்காரர்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும் என்று ஜோதிட கணிப்புகள் கூறுகின்றன. மேஷ ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் முதலீடுகளில் நிதி இழப்புகளை சந்திக்கலாம். கடன் பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளக்கூடும். கொடுத்த பணம் திருப்பிக் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். குடும்பம் மற்றும் காதல் வாழ்க்கையில் சிக்கல்கள் எழக்கூடும். திட்டமிட்ட காரியங்களை முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். இதன் காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கலாம். பிள்ளைகளின் சில செயல்பாடுகள் அவமானத்தை தேடித் தரலாம்.
35
கடகம்
சுக்கிர பெயர்ச்சியின் போது கடக ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சுக்கிரன் சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால் நிதி இழப்புகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளை தொடங்க திட்டமிடுபவர்கள் தற்காலிகமாக அதை ஒத்தி வைப்பது நல்லது. பணியிடத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. உங்கள் வேலையில் மேலதிகாரிகள் அதிருப்தி அடையக்கூடும் என்பதால் வேலை இழப்புகள் போன்றவற்றையும் சந்திக்கலாம். உங்களை வாட்டி வதைத்து வந்த பழைய நோய்கள் மீண்டும் தலை தூக்கக்கூடும் என்பதால் உடல் நலத்திலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிர பெயர்ச்சி சாதகமாக இல்லை. தனுசு ராசிக்காரர்களுக்கு நிதி திடீர் நிதி சிக்கல்கள் ஏற்படலாம். பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக கடன் வாங்க வேண்டிய சூழலும் ஏற்படக்கூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி குறையலாம். தேவையில்லாத விஷயங்களில் சிக்கிக் கொள்ள நேரலாம். கொடுத்த பணம் திருப்பி கிடைப்பதில் தடைகள் ஏற்படும். தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதிக அலைச்சல் மனம் மற்றும் உடல் ரீதியான துன்பத்தை ஏற்படுத்தக்கூடும். வயிறு அல்லது நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படக் கூடும் என்பதால் இந்த காலகட்டத்தில் உடல் நிலையிலும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
55
பரிகாரங்கள்:
சுக்கிர பகவானின் அதிபதியான மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சுக்கிரனால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுதலை அளிக்கும். ஏழை எளிய பெண்களுக்கு உணவுக்கு தேவையானப. பொருட்கள் அல்லது வஸ்திர தானம் வழங்குவது சுக்கிர பெயர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும். ‘ஓம் சுக்கிராய நமஹ’ என்கிற மந்திரத்தை தினமும் 24 முறை சொல்லலாம். அம்மனுக்கு வெள்ளை நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது ஏற்படும் சங்கடங்களை குறைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)