Venus Transit 2026: சுக்கிரன் பெயர்ச்சியால் 3 ராசிகளுக்கு அசுர வளர்ச்சி.. தொட்டதெல்லாம் தங்கமாக மாறப்போகுது!

Published : Jun 20, 2026, 06:35 AM IST

Venus Transit 2026: சுக்கிர பகவான் ஜூலை 4 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைகிறார். இதனால் 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே மாறப்போகுது. அவர்கள் தொட்டதெல்லாம் தங்கமாக மாறப்போகிறது.

PREV
14
சுக்கிரன் பெயர்ச்சி 2026

ஜோதிட சாஸ்திரத்தில் அசுர குரு என்று அழைக்கப்படுபவர் சுக்கிர பகவான். மனித வாழ்க்கைக்குத் தேவையான சுகபோகங்கள், அழகு, காதல், செல்வம், ஆடம்பர வாழ்வு ஆகியவற்றிற்கு இவரே முதன்மை காரகராக விளங்குகிறார். ரிஷபம் மற்றும் துலாம் ஆகிய ராசிகளின் அதிபதியான சுக்கிரன், தற்போது கடக ராசியில் சஞ்சரித்து வருகிறார்.

இந்நிலையில், வரும் ஜூலை 4 ஆம் தேதி சுக்கிர பகவான் சிம்ம ராசிக்குள் பிரவேசிக்க உள்ளார். ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை அவர் இதே ராசியில் நீடிப்பார். சிம்ம ராசியின் அதிபதி நவகிரகங்களின் ராஜாவான சூரியன் ஆவார். பகை கிரகமான சூரியனின் வீட்டிற்குள் சுக்கிரன் நுழைந்தாலும், சில குறிப்பிட்ட ராசிகளுக்கு இந்த இடமாற்றம் அசுர வளர்ச்சியைத் தரப்போகிறது. குறிப்பாக தொழில், வியாபாரம், பண வரவு ஆகியவற்றில் தொட்டதெல்லாம் துலங்கப்போகும் அந்த 3 அதிர்ஷ்ட ராசிகள் யார்? யார்? என்று இந்த பதிவில் காண்போம்.

24
துலாம்

துலாம் ராசி நேயர்களே, உங்கள் ராசி நாதனான சுக்கிரன் உங்கள் ராசிக்கு 11-வது வீடான லாப ஸ்தானத்திற்கு குடியேறுகிறார். இதனால் உங்களின் பொருளாதார நிலை கணிசமாக உயரும். புதிய தொழில் அல்லது வியாபாரத்தைத் தொடங்க நினைப்பவர்களுக்கு இது சாதகமான காலம்.

 உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான கதவுகள் திறக்கும். தொழிலதிபர்களுக்கு லாபம் தரும் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய நண்பர்களின் சேர்க்கையும், அவர்களால் ஆதாயமும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் வந்து சேரும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் ஏழைப் பெண்களுக்கு அல்லது சிறுமிகளுக்கு மல்லிகைப் பூ மற்றும் வெள்ளை நிற இனிப்புகளைத் தானமாக வழங்குங்கள். மகாலட்சுமி அஷ்டகம் படிப்பது கூடுதல் பலன் தரும்.

34
விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, சுக்கிர பகவான் உங்கள் ராசிக்கு 10-வது வீடான கர்ம ஸ்தானத்திற்கு (தொழில் ஸ்தானம்) வருகிறார். இதனால் உங்களின் உழைப்பிற்கான அங்கீகாரம் தேடி வரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த அரசு மற்றும் தனியார் வேலைகள் தடையின்றி முடியும்.

 வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள், புதிய ஆர்டர்கள் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் கை ஓங்கும்; மேலதிகாரிகளின் பாராட்டும் ஆதரவும் முழுமையாகக் கிடைக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் கை கூடி வரும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். கணக்கிலடங்கா நன்மைகள் நடக்கும்.

44
சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, சுக்கிரன் உங்கள் ராசியின் முதல் வீட்டிற்கு (லக்ன ஸ்தானம்) வருகிறார். உங்கள் ராசிக்குள்ளேயே சுக்கிரன் நுழைவதால் உங்களின் கவர்ச்சியும், ஆளுமையும் அதிகரிக்கும். உங்களின் தன்னம்பிக்கை பல மடங்கு உயரும். சமுதாயத்தில் அந்தஸ்தும், மதிப்பும் கூடும். 

கலை, ஊடகம், ஃபேஷன், அழகுக்கலை துறையில் இருப்பவர்களுக்குப் பொற்காலமாக அமையப்போகிறது. கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும், காதல் வாழ்க்கை இனிக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் பெருகும். வரன் தேடுபவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயம் ஆகும்.

பரிகாரம்: தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வதோடு, வெள்ளிக்கிழமை அன்று பசு மாட்டிற்குப் பச்சரிசியும் வெல்லமும் கலந்து உணவாகக் கொடுங்கள். தோஷங்கள் நீங்கி சுபயோகம் உண்டாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories