
பண வரவு அதிகரிக்க வேண்டும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ வேண்டும், காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் நீங்க வேண்டும், ஆடம்பரமான வாழ்க்கை வாழ வேண்டும் எனப் பலரும் விரும்புவார்கள்.
ஒருவருடைய வாழ்க்கையில் இத்தகைய சுகபோகங்கள், செல்வம், காதல், கலை, அழகு, ஆடம்பரம் ஆகியவற்றுக்கு ஜோதிடத்தில் முக்கியக் காரணியாகக் கருதப்படுபவர் சுக்கிர பகவான்.
நவக்கிரகங்களில் சுப கிரகமாக விளங்கும் சுக்கிரன், தனது இயக்கத்தில் வக்ர நிலையில் இருந்து மீண்டும் நேர்கதியில் பயணிக்கத் தொடங்குவது ஜோதிட ரீதியாக முக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, சுக்கிரனின் வக்ர நிவர்த்தி சில ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாகத் தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் கைகூடவும், பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படவும், காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி திரும்பவும் சாதகமான காலமாக அமையலாம்.
அந்த வகையில், சுக்கிர பகவானின் வக்ர நிவர்த்தியால் அதிர்ஷ்டம் பெறப்போகும் 5 ராசிகள் யார் யார்? அவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கலாம்? வேலை, தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படலாம் என்பதை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி சுக்கிர பகவான் வக்ரப் பெயர்ச்சியைத் தொடங்கினார். இந்த வக்ரப் பயணம் நவம்பர் 14 ஆம் தேதி நிறைவடைந்து மீண்டும் நேர்கதியில் பயணிக்கத் தொடங்குகிறார்.
வக்ரப் பெயர்ச்சி தொடக்கம்: அக்டோபர் 3, 2026.
வக்ர நிவர்த்தி: நவம்பர் 14, 2026.
நேரம்: அதிகாலை 5.57 மணி
நேர்கதியில் இருக்கும் ராசி: கன்னி.
துலாம் ராசிக்குள் மீண்டும் பிரவேசம்: நவம்பர் 22, 2026.
சுக்கிரன் சுமார் 42 நாட்கள் வக்ர நிலையில் பயணித்த பிறகு நேர்கதிக்குத் திரும்புகிறார். வேத ஜோதிடக் கணக்கீட்டின்படி, கன்னி ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் சுக்கிரன் பின்னர் துலாம் ராசிக்குச் செல்கிறார்.
சுக்கிர பகவானின் முக்கியத்துவம் என்ன?
சுக்கிர பகவான் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், காதல், திருமணம், கலை, அழகு, வாகனம், சொகுசு வாழ்க்கை ஆகியவற்றுக்கு அதிபதியாகக் கருதப்படுகிறார்.
மிதுனம் - முன்னேற்றத்திற்கான வாய்ப்பு
சிம்மம் - பணவரவுக்கான வாய்ப்பு
துலாம் - வாழ்க்கையில் புதிய தொடக்கம்
தனுசு - தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்பு
கும்பம் - அதிர்ஷ்ட வாய்ப்புகள்
சுக்கிர பகவானின் அருளைப் பெற என்ன செய்யலாம்?
முக்கியக் குறிப்பு
மேற்கண்ட பலன்கள் பொதுவான ராசி அடிப்படையிலான ஜோதிடக் கணிப்புகளே தவிர, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை அல்ல. ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகம், லக்னம், கிரக நிலைகள் மற்றும் தசா புத்திகளைப் பொறுத்துப் பலன்கள் மாறுபடலாம்.