Published : Jan 20, 2025, 09:21 AM ISTUpdated : Jan 20, 2025, 09:23 AM IST
Lakshmi Narayana Yoga Palan For Gemini, Pisces, Aquarius Zodiac Signs : சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய இரு கிரகங்கள் மீன ராசியில் இணைவதால் 12 ஆண்டுகளுக்கு பிறகு உருவகாகும் லட்சுமி நாராயண யோகத்தால் எந்தெந்த ராசியினருக்கு என்ன பலன் என்று பார்க்கலாம்.
வேத சாஸ்திரங்களின் கூற்றுப்படி புதன் நாராயணனின் வடிவம் என்றும், சுக்கிரன் லட்சுமி தேவியின் வடிவம் என்றும் கூறப்படுகிறது. இந்த 2 கிரகங்களும் ஒன்றிணையும் நிலையில் தான் லட்சுமி நாராயணன் யோகம் உருவகிறது. இந்த 2 கிரகங்களின் இணைவு பண வரவை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் அதிகரிக்கும். இந்த மாதம் 28 ஆம் தேதி மீனத்திற்கு சுக்கிரன் பெயர்ச்சி ஆகும் நிலையில் வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி புதன் மீனத்திற்குள் நுழைகிறார். இந்த 2 கிரகங்களும் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீனத்திற்குள் நுழையும் நிலையில் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இந்த கிரகங்களின் பெயர்ச்சி மீனத்தில் 69 நாட்கள் நீடிக்கும். இந்த ராசி மாற்றத்தின் காரணமாக 3 ராசிகளுக்கு என்ன பலன் என்று பார்க்கலாம்.
24
Venus Mercury Serkai Forms Lakshmi Narayana Yogam
கும்ப ராசிக்கான லட்சுமி நாராயண யோக பலன்:
கும்ப ராசிக்கு லட்சுமி நாராயண யோகத்தால் புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். சரியான முடிவுகளை எடுப்பீர்கள். வேலையில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும் யோகம் உண்டாகும்.
மிதுன ராசிக்கு லட்சுமி நாராயண யோகத்தால் குடும்ப பிரச்சனை தீரும். அலுவலகத்தில் பாராட்டு கிடைக்கும். பண வரவு தேடி வரும். வியாபாரம் மற்றும் தொழில் விரிவடையும். லாபம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். சிலருக்கு புதிய வேலைக்கான வாய்ப்புகள் தேடி வரும். உங்களது உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
Venus Mercury Conjunction Palan Tamil, Lakshmi Narayana Yoga Palan Tamil
மீன ராசிக்கு லட்சுமி நாராயண யோக பலன்:
12 ஆண்டுகளுக்கு பிறகு மீனத்திற்கு சுக்கிரன் மற்றும் புதன் பெயர்ச்சி ஆகும் நிலையில் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் மீன ராசிக்கு பண வரவு அதிகரிக்கும். அதோடு தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலமாக சம்பள உயர்வும் கிடைக்கும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். செல்வ, செழிப்பு உயரும். வீடு கட்டும் யோகம் தேடி வரும்.