Vastu Mistakes Pooja Room : இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் கண்டிப்பாக பூஜை அறை இருக்கும். பூஜை அறையில் தினமும் பூஜை செய்வார்கள். மேலும் வீட்டை விட்டு வெளியே செல்லும்போதெல்லாம் பூஜை அறையில் கண்டிப்பாக வழிபாடு செய்வார்கள். இத்தகைய சூழ்நிலையில் பூஜை அறையை சிறப்பு கவனம் செலுத்துவது ரொம்பவே முக்கியம்.
25
பூஜை அறை
வாஸ்து சாஸ்திரத்தின் படி, நீங்கள் பூஜை அறையில் செய்யும் சில தவறுகள் உங்களுக்கு அதிக பல செலவை ஏற்படுத்தக் கூடும் தெரியுமா? அந்த தவறுகள் குறித்து வாசுசாஸ்திரத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. மேலும் நீங்களும் இது போன்ற தவறுகளை பூஜையறையில் செய்தால் உடனே அவற்றை சரி செய்யுங்கள். இல்லையெனில், உங்களது வீட்டில் எதிர்மறை ஆற்றல் பரவும். இது தவிர வீட்டில் நிதி நெருக்கடி நிலவும்.
35
பூஜை அறை திசை:
வாஸ்து சாஸ்திரத்தின் படி, பூஜை அறையானது சரியான திசையில் இருக்க வேண்டும். ஒருவேளை தவறான திசையில் இருந்தால் நீங்கள் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இத்தகைய சூழ்நிலையில், உங்கள் வீட்டில் இருக்கும் பூஜை அறையை வைப்பதற்கான சரியான திசை வடக்கு திசை தான். அதே சமயம் தெற்கு மற்றும் மேற்கு திசை பூஜை அறை இருந்தால் அது அசமமாக கருதப்படுகிறது.
வாஸ்து சாஸ்திரத்தின்படி பூஜையறையில் இருக்கும் கடவுள்களின் சிலைகளை நன்கு பராமரிக்க வேண்டும். முக்கியமாக சிலைகளை கழுவும் போது அவை உடைந்து போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் உடைந்தே சிலைகளை வழிபடுவது அசுபம் என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றது. இதனால் தெய்வங்களும் கோபம் அடைவார்கள். இது தவிர வீட்டில் எதிர்மறை சக்தி பரவும் மற்றும் வறுமை நிலவும்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி பூஜை அறையை வீட்டில் கட்டும் போது சரியான இடத்தில் தான் கட்ட வேண்டும். படுக்கையறை மாடிப்படிக்கு அடியில், பாத்ரூமுக்கு அருகில் ஆகியவற்றிற்கு அருகில் ஒருபோதும் கட்டவே கூடாது. இல்லையெனில், வீட்டில் எதிர்மறை ஆற்றல் பரவும். இது தவிர வீட்டில் பூஜை அறை எப்போதும் திறந்து வெளியில் தான் இருக்க வேண்டும். இது வீட்டிற்குள் நல்ல ஆற்றலை பரப்பும்.