மேஷ ராசியில் உருவாகும் வைபவ லட்சுமி ராஜயோகம்.! தொடர் வெற்றிகளை குவிக்கப்போகும் ராசிகளின் பட்டியல்.! உங்க ராசி இருக்கா?

Published : Mar 25, 2026, 10:21 AM IST

Vaibhav Lakshmi Rajyog 2026 Lucky Zodiac Signs : ஏப்ரல் மாதத்தில் சந்திரன் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் வைபவ லட்சுமி ராஜயோகம் காரணமாக சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
14
Vaibhav Lakshmi Rajyog 2026 Lucky Zodiac Signs

வேத ஜோதிடத்தில் கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நகர்ந்து பிற கிரகங்களுடன் இணைந்து சுப யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் சந்திரன் மற்றும் சுக்கிரன் இணைவதால் வைபவ லட்சுமி ராஜயோகம் உருவாகிறது. சுக்கிரன் மார்ச் 26 மேஷ ராசிக்குள் நுழைவார். ஏப்ரல் 18 சந்திரன் மேஷ ராசிக்குள் நுழைவதால், அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

24
மேஷம்

மேஷ ராசியின் முதல் வீட்டில் சந்திர சுக்கிர சேர்க்கையால் வைபவ லெட்சுமி ராஜயோகம் உருவாக இருக்கிறது. இதன் காரணமாக மேஷ ராசிக்காரர்களின் ஆளுமைத் திறன் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். நிதி நிலையில் எதிர்பாராத அளவிற்கு முன்னேற்றம் ஏற்படும். தொழில் செய்து வருபவர்கள் நல்ல லாபம் ஈட்டுவீர்கள். அலுவலக வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். சிறிதாக தொழில் நடத்தி வருபவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள்.

34
சிம்மம்

சந்திர சுக்கிர சேர்க்கையால் உருவாகும் வைபவ லட்சுமி ராஜயோகம் சிம்ம ராசியின் ஒன்பதாவது வீட்டில் உருவாக இருக்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். எடுக்கும் வேலை அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்படும். எதிர்பாராத வழிகளில் இருந்து பணவரவு கிடைக்கும். இழுபறியில் இருந்த பணிகள் முடிவுக்கு வரும். சிக்கிய பணம் கைக்கு கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். வேலையில்லாமல் இருந்து வருபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். நிதி சார்ந்த முன்னேற்றம் காணப்படும்.

44
கடகம்

சந்திர சுக்கிரச் சேர்க்கையால் உருவாகும் வைபவ லட்சுமி ராஜயோகம் கடக ராசியின் பத்தாம் வீட்டில் உருவாக இருக்கிறது. பத்தாம் வீடு தொழில் ஸ்தானம் என அழைக்கப்படுகிறது. எனவே கடக ராசிக்காரர்கள் தொழில் ரீதியான நன்மைகளைப் பெறுவீர்கள். தொழிலில் வளர்ச்சி காணப்படும். வேலையில் உங்களுக்கு தொல்லை கொடுத்த வந்த மேலதிகாரிகள் விலகுவார்கள். வியாபாரிகளுக்கு தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி நல்ல உயர்வு ஏற்படும். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் உருவாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை நடைபெறும். ஆடம்பர வாழ்க்கை வாழ்வீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories