2025ல் குருவின் அருள் யாருக்கு கிடைக்கும்? கொடிகட்டி பறக்க போகும் ராசிக்காரங்க யாரெல்லாம் தெரியுமா?

First Published | Dec 29, 2024, 12:17 PM IST

Guru Transit 2025 Palan Tamil : 2025 ஆம் ஆண்டு புத்தாண்டில் குருவின் அருளால் இந்த 6 ராசியினருக்கு என்னென்ன பலன்கள் உண்டாகும் என்று பார்க்கலாம் வாங்க..

Guru Transit in Gemini Zodiac 2025 Palan Tamil

Guru Transit in Gemini Zodiac 2025 Palan Tamil : 2025 ஆம் ஆண்டில் குரு, சனி, ராகு மற்றும் கேது பெயர்ச்சி நிகழ இருக்கிறது. இதில் குரு பகவான் வலிமையுடன் சுப பலன்களை கொடுக்க போகிறார். 2025 ஆம் ஆண்டின் புத்தாண்டில் ஜனவரி 16 முதல் குரு வக்ர நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து கடைசியில் மே 14 ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைவார். அதுவரையில் குரு மிகவும் வலிமையுடன் இருப்பார். இது 6 ராசியினருக்கு யோகத்தை அள்ளி தர போகிறது. அதை பற்றி இந்தப் பதிவில் நாம் காண்போம்.

Guru Transit in Gemini Zodiac 2025 Palan Tamil

ரிஷபம் ராசி:

சொத்து பிரச்சனை இருந்தாலும் அது சரியாகும். பொருளாதார பிரச்சனை முடிவுக்கு வரும். வருமானம் அதிகரிக்கும். திருமணம் முயற்சி கை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். செலிபிரிட்டி உடனான தொடர்பு கிடைக்க பெறும். சுப காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.

Tap to resize

Guru Transit in Gemini Zodiac 2025 Palan

கன்னி ராசி:

குருவின் அருளால் இரட்டிப்பு லாபம் உண்டாகும். தன மற்றும் பாக்ய யோகம் தேடி வரும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்க பெறுவீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்புகள் உருவாகும். வாழ்க்கை முன்னேற்றப்பாதையில் செல்லும். பொருளாதாரம் உயரும். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி தேடி வரும்.

Guru Transit in Gemini Zodiac 2025 Palan Tamil

மேஷம் ராசி:

குருவின் வலிமையான பலன் மேஷ ராசிக்கு இரட்டிப்பு பலனை தரும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட சம்பளம் அதிகரிக்கும். தடைபட்ட எல்லா வேலைகளும் தடையின்றி நடைபெறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தொழில் சிறப்பாக நடைபெறும். சொந்த வீடு கட்டும் வாய்ப்பு தேடி வரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.

Guru Peyarchi 2025 Palan Tamil

கடகம் ராசி:

கடக ராசிக்கு 11ஆம் அதிபதி குரு பகவான். இவர், வக்ர நிவர்த்தி அடையும் நிலையில் முடியாமலிருந்த வேலைகள் யாவும் வெற்றிகரமாக முடியும். அதன் மூலமாக பொருளாதார உயர்வு கிடைக்கும். மற்றவரிடமிருந்து வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். பேரும், புகழும் கிடைக்கும். சொத்து, சுகம் சேரும். அலுவலகத்தில் பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும்.

Guru Transit 2025 Palan Tamil

மகரம் ராசி:

வீட்டில் சுப காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும். சொந்த வீடு கட்டும் வாய்ப்பு தேடி வரும். நிலம் வாங்குவீர்கள். உங்களது திறமைக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். அரசின் உதவி கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் அதிகரிக்கும்.

Guru Transit in Gemini Zodiac 2025 Palan Tamil

விருச்சிகம் ராசி:

திருமணம் நடக்கும். வசதியான குடும்பத்தில் வரன் அமையும். காதலில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். புதிய புதிய வேலைகள் தேடி வரும். அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். உடல்நிலையைப் பொறுத்த வரையில் சீராக இருக்கும்.

Latest Videos

click me!