
'திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயம் செய்யப்படுகிறது' என்று நமது முன்னோர்கள் கூறுவார்கள். சிலருக்கு பெற்றோர் நிச்சயித்த திருமணம் நடக்கும். சிலர் காதல் திருமணம் செய்வதை குறிக்கோளாக கொண்டிருப்பார்கள். ஜோதிட சாஸ்திரத்தின்படி, குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே காதலும், ஈர்ப்பும் அதிகமாக இருக்கும். இவர்கள் வீட்டில் பார்த்து வைக்கும் திருமணத்தை விட, காதலித்து திருமணம் செய்து கொள்வதற்கே 100% முன்னுரிமை தருகிறார்கள். அந்த வகையில் காதலித்து, அதற்கு பெற்றோரையும் சம்மதிக்க வைத்து இறுதியில் காதலில் வெற்றி பெற்று திருமணம் செய்து கொள்ளும் ராசிக்காரர்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் எதற்கும் அஞ்சாத துணிச்சல் குணம் கொண்டவர்கள். காதலிப்பதிலும் இவர்களுக்கு அசாத்திய தைரியம் இருக்கும். தங்கள் அன்புக்குரியவர்களை கவர எந்த எல்லைக்கும் செல்வார்கள். இவர்கள் காதலில் விழுந்துவிட்டால், சாதி, மதம், அந்தஸ்து என எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். வீட்டில் எதிர்ப்பு கிளம்பினாலும், தங்கள் முடிவில் உறுதியாக இருந்து பெற்றோரை சம்மதிக்க வைத்து, காதலித்தவரையே கரம் பிடிப்பதில் இவர்கள் வல்லவர்கள்.
சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே அன்பு, பாசம், காதல் ஆகியவை ரத்தத்தில் ஊறியிருக்கும். இவர்கள் காதலிக்கத் தொடங்கிவிட்டால் தங்கள் காதலில் மிகவும் உண்மையாக இருப்பார்கள். இவர்களது அகராதியில் காதலை விட்டுக்கொடுத்தல் அல்லதுகாதலை கைவிடுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. தனது காதலை திருமணத்தில் முடித்தே தீர வேண்டும் என்ற பிடிவாத குணம் கொண்ட இவர்கள் அதில் பெரும்பாலும் வெற்றி பெற்று விடுவார்கள்.
மிதுன ராசிக்காரர்கள் சிறந்த பேச்சாற்றல் மற்றும் கலகலப்பான குணம் கொண்டவர்கள். தங்களின் இனிமையான பேச்சாலேயே துணையை எளிதில் கவர்ந்து விடுவார்கள். இவர்களுடன் பழகும் எவரும் இவர்களின் வசீகர குணத்தால் எளிதில் காதலில் விழுந்து விடுவர். இந்த ராசிக்காரர்கள் தங்களை நன்கு புரிந்து கொள்ளும் ஒருவரைத் தான் வாழ்க்கை துணையாக ஏற்க விரும்புவார்கள். எனவே இவர்கள் நீண்ட நாட்களாக பழகி, புரிந்து கொண்ட காதலரையே கைப்பிடிக்க அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
சிம்மம் - கம்பீரக் காதலர்கள்
சிம்ம ராசிக்காரர்கள் காதலித்தாலும் சரி, கல்யாணம் செய்தாலும் சரி, அது ராயலாக பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். தங்களின் துணையை தேர்ந்தெடுப்பதில் இவர்களுக்கு மிக உயர்ந்த ரசனை இருக்கும். தான் விரும்பிய நபர் தனக்கு மட்டுமே சொந்தமாக வேண்டும் என்ற ஆதிக்கம் இவர்களிடம் இருக்கும். காதலில் ஏதேனும் தடைகள் வந்தால், அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு போராடி வெற்றி பெறுவார்கள். இவர்களது திருமண வாழ்க்கை பெரும்பாலும் காதல் திருமணமாகவே அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
கும்ப ராசிக்காரர்கள் சுதந்திரத்தை அதிகம் விரும்புபவர்கள். யாரோ ஒரு புதிய நபர் வந்து தங்களை கட்டுப்படுத்துவதை இவர்கள் விரும்ப மாட்டார்கள். தங்களின் சிந்தனைக்கும், ரசனைக்கும் ஒத்துப்போகும் ஒருவரையே காதலிப்பார்கள். முன்பின் தெரியாத ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதை விட, தங்களை முழுமையாக அறிந்த, தங்களுக்கு சுதந்திரம் கொடுக்கும் காதலரை திருமணம் செய்து கொள்வதையே இவர்கள் புத்திசாலித்தனமாக கருதுகிறார்கள்.
மேலே குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு காதல் திருமணம் அமைவதற்கான வாய்ப்புகள் ஜோதிட ரீதியாக அதிகம் இருந்தாலும், ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினம், 5-ஆம் வீடு (காதல் ஸ்தானம்) மற்றும் 7-ஆம் வீடு (களத்திர ஸ்தானம்) வலுவாக இருந்தால் மட்டுமே காதல் திருமணம் 100% வெற்றிகரமாக கைக்கூடும் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
பொறுப்பு துறப்பு: இந்த செய்தி கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. சுவாரஸ்யத்துக்காக மட்டுமே இது வழங்கப்படுகிறது. காதல் என்பது இரு மனங்கள் சம்பந்தப்பட்டது. காதலில் வெற்றி, தோல்வி என்பதும் இரு மனங்களின் புரிதலை பொறுத்துதான் அமையும்.