Top 5 No Apologies Zodiac Signs : ஜோதிடத்தின் படி, சிலர் தங்கள் தவறுகளை விரைவாக ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்பார்கள். ஆனால் மற்றவர்களுக்கு, மன்னிப்பு கேட்பது தங்கள் உயிரை இழப்பது போல் கடினம். அந்த ராசியினர் யாரென்று பார்க்கலாம்.
Top 5 No Apologies Zodiac Signs : ஒவ்வொரு ராசிக்கும் தனிப்பட்ட குணங்கள் உண்டு. அதன் அடிப்படையில், சில ராசிக்காரர்கள் மன்னிப்பு கேட்க யோசிக்கவே மாட்டார்கள். சில ராசிக்காரர்கள் மன்னிப்பு கேட்பதில் தயக்கம் காட்டுவார்கள். அப்படிப்பட்ட ராசிக்காரர்கள் யார் யார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
28
மன்னிப்பு கேட்காத ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு குணாதிசியங்கள் இருக்கும். அப்படிப்பட்ட ராசிகளில் சிலர் தாங்கள் செய்த தவறுக்கு உடனே மன்னிப்பு கேட்டுவிடுவார்கள். சில ராசிக்காரரர்கள் என்னதான் தவறு செய்திருந்தாலும் மன்னிப்பு கேட்கவே யோசிப்பார்கள். அப்படிப்பட்ட ராசியினர் பற்றி தான் நாம் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்ம ராசிக்காரர்கள் தலைமைப் பண்பு கொண்டவர்கள். தன்மானம், பெருமை மற்றும் சுயமரியாதை உணர்வு இவர்களிடம் அதிகம். அதனால், தாங்கள் தவறு செய்திருந்தாலும், அதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்பது இவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். இது இவர்களின் பெருமைக்குக் களங்கம் விளைவிக்கும் என நினைப்பார்கள். என்னதான் தவறுகள் செய்திருந்தாலும் மற்றவர்கள் மீது பழி சுமத்துவார்கள்.
48
மேஷம் (Aries):
மேஷ ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாதமானவர்கள். இவர்களது அவசர முடிவால் எல்லாமே தவறாக முடியும். தான் எடுத்த முடிவும், செய்த செயலும் சரியானது என்ற எண்ணம் இவர்களுக்குள் ஆழமாக இருக்கும். ஒருவேளை தவறு என்று தெரிந்தாலும், அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மன்னிப்பு கேட்பது தோல்வியாகக் கருதுவார்கள். அதனால், ஒரு துளி கூட மன்னிப்பு கேட்க மாட்டார்கள்.
58
விருச்சிகம் (Scorpio):
விருச்சிக ராசிக்காரர்கள் உணர்ச்சிபூர்வமானவர்கள், ஆனால் அதை வெளிப்படுத்த மாட்டார்கள். இவர்களுக்கு யார் மீதாவது கோபம் வந்தால், அதை மன்னிப்பது அவ்வளவு எளிதல்ல. அதேபோல், இவர்களைப் பற்றிய குறைபாடுகளை மற்றவர்கள் சுட்டிக்காட்டும்போது, அதை ஏற்றுக் கொள்வதற்கோ அல்லது மன்னிப்பு கேட்பதற்கோ இவர்கள் தயங்குவார்கள்.
68
மகரம் (Capricorn):
மகர ராசிக்காரர்கள் மிகவும் நடைமுறை சார்ந்தவர்கள் மற்றும் ஒழுக்கமானவர்கள். இவர்கள் தவறு செய்ய நேர்ந்தால் கூட, அதை ஒப்புக்கொள்வது இவர்களுக்கு ஒரு பலவீனமாகக் கருதப்படும். அதனால், இவர்கள் மன்னிப்பு கேட்பதை விட, தங்கள் செயல்களின் மூலம் அதை சரி செய்ய முயற்சிப்பார்கள்.
78
தனுசு (Sagittarius):
தனுசு ராசிக்காரர்கள் சுதந்திர மனப்பான்மை கொண்டவர்கள். இவர்கள் பெரும்பாலும் தங்கள் கருத்துக்களில் உறுதியாக இருப்பார்கள். இவர்களின் தவறுகளுக்காக மற்றவர்கள் மன்னிப்பு கேட்கச் சொன்னால், அதை ஒரு கட்டுப்பாடாகக் கருதி, அதிலிருந்து தப்பித்துச் செல்லவே முயற்சி செய்வார்கள்.
88
மேஷம், சிம்மம், விருச்சிகம், தனுசு மற்றும் மகரம் ராசிகள்
மேலே குறிப்பிட்ட மேஷம், சிம்மம், விருச்சிகம், தனுசு மற்றும் மகரம் ஆகிய 5 ராசியினர் மன்னிப்பு கேட்கமாட்டார்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால், அவர்கள் மன்னிப்பு கேட்க தயக்கம் காட்டுவார்கள். ஆனால், மன முதிர்ச்சி மற்றும் சூழ்நிலையைப் பொறுத்து இவர்களின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படலாம்.