Top 3 Unlucky Zodiac Signs in Marriage Life
Top 3 Unlucky Zodiac Signs in Marriage Life : ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் திருமணம் முக்கியமான ஒன்று. அதனை ஆயிரம் காலத்து பயிர் என்று கூட சொல்வதுண்டு. திருமணத்திற்கு பிறகு ஒருவரது வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைகிறதா அல்லது மோசமான வாழ்க்கையாக மாறுகிறதா என்பது நமக்கு வரும் வாழ்க்கைத் துணையைப் பொறுத்தது. ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு சில ராசியினர் தங்களது வாழ்க்கை துணையை நீண்ட காலம் வரை கொண்டு செல்ல முடியாதவர்களாக இருக்கிறார்கள். கருத்து வேறுபாடு காரணமாக அல்லது திருமணத்திற்கு பிறகு குணங்கள் பிடிக்காமல் போவதன் காரணமாக பிரிந்து விடுகிறார்கள். இது காதல் உறவுக்கும் பொருந்தும். திருமணத்திற்கு பிறகு அவர்களது வாழ்க்கை துர்திர்ஷ்டம் நிறைந்ததாக இருக்ககூடிய ராசிக்காரர்கள் யார் யார் என்று இந்த பதிவில் நாம் காணலாம். இதில் முதலில் இருப்பது சிம்ம ராசிக்காரர்கள்.
Leo Zodiac Signs, Top 3 Unlucky Zodiac Signs in Marriage Life
சிம்மம் ராசி:
இவர்கள் சுயநலத்தை விரும்பக் கூடியவர்கள். மற்றவர்களின் தேவை இருந்தால் மட்டுமே அவர்களிடம் பழகக் கூடியவர்கள். தேவை இல்லையென்றால் அவர்களை கண்டு கொள்ளவேமாட்டார்கள். அதோடு தனக்கு தேவை இருந்தால் மட்டுமே மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள். திருமணத்திற்கு பிறகு இவர்கள் எப்படியிருந்தாலும் திருமணத்திற்கு பிறகு இந்த ராசியினருக்கு பல ரூபத்திலிருந்து பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். அடுத்தவர்களிடம் நெருங்கி பழகும் போது இந்த ராசிக்காரர்களின் குணம் தெரிந்து அவர்கள் விலகி விடுவார்கள். இதனால், இந்த ராசியினருக்கு திருமண வாழ்க்கை மோசமானதாக இருக்கும். இந்த ராசியினரை திருமணம் செய்பவர்கள் சற்று யோசித்து தான் திருமணம் செய்ய வேண்டும்.
Thulam Rasi, Top 3 Unlucky Zodiac Signs in Marriage Life, Libra
துலாம் ராசி:
இவர்கள் எப்போது சந்தேகத்துடனேயே இருப்பார்கள். யாரையும் அவ்வளவு எளிதாக நம்பிவிடமாட்டார்கள். காதலன் அல்லது காதலிக்காக எதையும் செய்ய ரெடியாகவே இருக்க கூடியவர்கள் தான் இந்த ராசிக்காரர்கள். ஆனால் சந்தேக குணத்தின் காரணமாக அவர்களது உறவு நீண்ட காலம் நீடிப்பதில்லை. தேவைக்காக மற்றவர்களுடன் பழகுவார்கள். தேவை நிறைவேறியதும் உறவை அவர்களாகவே முறித்து கொள்வார்கள். இவர்கள் பல உறவுகளிலும் கூட ஈடுபடுவார்கள். இவர்களது நோக்கம் தான் என்ன என்று யாராலயும் புரிந்து கொள்ளவே முடியாது.
Top 3 Unlucky Zodiac Signs in Marriage Life, Aquarius, Kumbam Rasi
கும்பம் ராசி:
இவர்கள் வெளிப்படையான குணம் கொண்டவர்கள். உறவுகளில் நிலையாகவே இருக்கமாட்டார்கள். எப்போதும் நேரத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே இருப்பார்கள். உறவுகளில் விளையாட்டுத்தனமாக இருப்பார்கள். சொன்ன சொல்லை காப்பாற்றும் குணம் இவர்களிடம் கிடையாது. இந்த ராசியினர் சொல்வதைத் தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.