
Kanavu Palangal in Tamil : கனவுகள் நம் வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாகும். ஜோதிட, கனவு சாஸ்திரம் என்ற ஒரு பிரிவு உள்ளது. இந்த நூலில் கனவுகளின் மர்மமான அம்சங்கள் மற்றும் அவற்றின் அர்த்தங்கள் விளக்கப்பட்டுள்ளன. நாம் காணும் கனவுகளுக்கு பலன்கள் சாஸ்திரங்களில் முன் கூட்டியே சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு பலனும் உண்டு. சில கனவுகள் உங்களை எச்சரிக்கையும் வகையில் இருக்கும். ஒரு சிலருக்கு பின்னாளில் நடக்க கூடியது முன் கூட்டியே கனவாக வரலாம்.
பண வரவு கனவுகள்: ஒவ்வொருவருக்கும் இரவில் தூங்கும்போது கனவுகள் வருவது உறுதி. இந்தக் கனவுகள் நம் வாழ்க்கையுடன் ஆழமான தொடர்பைக் கொண்டுள்ளன. கனவு சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கனவுக்கும் ஒரு அர்த்தம் உண்டு, அதைப் புரிந்துகொள்வதன் மூலம் நாம் எதிர்கால நிகழ்வுகளைப் பற்றி அறியலாம். இவற்றில் சில கனவுகள் நமக்கு எதிர்காலத்தில் ஏற்படும் பண வரவைப் பற்றியும் சொல்கின்றன. அதாவது, இந்தக் கனவுகள் யாருக்கு வந்தாலும் அவர்களைப் பணக்காரர்களாக மாற்றிவிடும். அப்படிப்பட்ட 10 கனவுகளைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்…
கனவில் தீப்பெட்டி வந்தால் என்ன பலன்:
உங்களது கனவில் தீப்பெட்டி வந்தால் திடீரென்று பண வரவு வருவதற்கு வாய்ப்பு ஏற்படும். இதுவே சிறிய அளவிலான நெருப்பு சுடராக கண்டால் வாழ்க்கையில் செல்வ செழிப்பு ஏற்படும். அதோடு, பொன், பொருள் சேர்க்கை ஏற்படும் என்பது ஐதீகம். இதுவே நெருப்பை பற்ற வைப்பது போன்று கனவு கண்டால் உங்களுக்கான வாய்ப்புகள் கை நழுவிப் போகும். உங்களைச் சுற்றி தீ எரிவது போன்று கனவு வந்தால் உங்களுக்கு உடல் நலம் மேம்படும். தீராத நோய் தீரும்.
தீ மிதிப்பது போன்று கனவு வந்தால் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் அறிகுறியாகும். ஏதோ ஒரு இடத்தில் தீ பிடித்து எரிவது போன்று கனவு வந்தால் தீய செய்தி வந்து சேரும். உங்கள் உடலில் தீ பற்றி எரிவது போன்று கனவு வந்தால் உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு துன்பம் ஏற்படும் அறிகுறியாகும்.
வெள்ளை பாம்பு கடிப்பது போன்று கனவு வந்தால் பலன்:
கனவில் வெள்ளைப் பாம்பு கடித்தால், பண விஷயங்களில் நல்ல செய்தி கிடைக்கும். ஒருவரது கனவில் பாம்பு கடிப்பது போன்று கனவு வந்தால் கஷ்டம் விலகும் என்பதை குறிக்கும். கடன் தொல்லை நீங்க போகிறது என்று அர்த்தம். இதுவே உங்களது கனவில் வெள்ளை நிற பாம்பு வந்தால் அது மங்களகரமான செய்தியை குறிக்கும். அதிர்ஷ்டம் அடிக்க போகிறது என்று அர்த்தம். அதே போன்று தங்க நிறத்தில் பாம்பை கண்டாலும் இதே பலன். இறந்த பாம்பை கனவில் கண்டால் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பதை குறிக்கிறது. இதுவே நிறைய பாம்புகளை கண்டால் பிரச்சனை வரும் என்பதை குறிக்கிறது.
கனவில் ஆரஞ்சு பழம் வந்தால் பலன்:
ஒருவருக்குக் கனவில் ஆரஞ்சு பழம் தென்பட்டால், அவருக்கும் பண வரவு ஏற்படலாம். ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவது போன்று கனவு கண்டால் வாழ்வாதாரம் உயரும் என்பதை குறிக்கும். ஆரஞ்சு சாப்பிடுவது திருமணத்தின் அறிகுறி அல்லது புதிய தொடக்கத்தின் அறிகுறியாகும். இதுவே ஆரஞ்சு பழத்தை தோலுடன் சேர்த்து சாப்பிடுவது போன்று கனவு வந்தால் வாழ்க்கையில் சிரமங்களை எதிர்கொள்வதை குறிக்கும்.
4. கனவில் பழங்களைச் சாப்பிடுவதைக் காண்பதும் பண வரவின் அறிகுறியாகும்.
5. கனவில் புதைக்கப்பட்ட தங்கம் அல்லது பிற விலைமதிப்பற்ற பொருட்களைக் காண்பவருக்குப் புதையல் கிடைக்கலாம்.
6. கனவில் பழுத்த கோதுமை கதிர்களைக் காண்பதும் சுபம். இதனாலும் பண வரவு சாத்தியமாகும்.
7. கனவில் நீங்கள் ஒருவருக்குப் பணத்தைக் கடனாகக் கொடுத்தால், உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பணம் கிடைக்கும்.
8. கனவில் வைரம், நகைகள் போன்றவற்றைக் காண்பது லட்சுமி தேவியின் அருளைப் பெறுவதற்கான அறிகுறியாகும், இவர்களுக்குப் புதையல் கிடைக்கலாம்.
9. கனவில் நீங்கள் ஒருவருக்கு காசோலை எழுதிக் கொடுத்தால், அவருக்குப் பரம்பரைச் சொத்துக்கள் கிடைக்கும்.
10. கனவில் குயவர் பானை செய்வதைக் காண்பதும் பண வரவின் அறிகுறியாகும்.