Daily Love Horoscope: காதலர்களுக்குப் பொன்னான நாளா? சோதனையான நாளா? இன்றைய 12 ராசிபலன் இதோ!

Published : Jun 04, 2026, 10:01 AM IST

Zodiac Signs: இன்றைய காதல் ராசி பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கும் பலவிதமான திருப்பங்களை முன்னறிவிக்கின்றன. சில ராசிகளுக்கு உறவில் சவால்கள் ஏற்படலாம், மற்றவர்களுக்கு புதிய காதல் மலரவும், ஆச்சரியங்கள் காத்திருக்கவும் வாய்ப்புள்ளது.

PREV
112
மேஷம் - விட்டுக் கொடுத்தலும் ஆதரவு

காதல் உறவில் சோதனையான நேரமிது. சிலருக்குத் திடீர் பிரிவோ அல்லது மனவருத்தமோ ஏற்பட்டு கவலையைத் தரலாம். இன்று உங்கள் பார்ட்னர் உங்கள் மீது முழு கவனம் செலுத்த முடியாமல் போகலாம். கஷ்டமான நேரத்திலும் துணையின் பக்கம் நில்லுங்கள். உறவில் தவறுகள் நடந்திருந்தால், அதையே நினைத்துக் கொண்டிருக்காமல் மன்னித்து அடுத்த கட்டத்திற்கு நகருங்கள். அவருக்காகச் பிரத்யேகமாக நேரம் ஒதுக்குங்கள்.

212
ரிஷபம் - நம்பிக்கையின் தூண்

நட்பும் காதலும் இன்று உங்களின் கவலைகளை மறக்கடிக்கும். உங்கள் முழு கவனமும் துணையை ஈர்ப்பதில்தான் இருக்கும். உங்களின் பேச்சாற்றல் அதற்குப் பெரிதும் உதவும். உங்கள் இன்ப துன்பங்களில் கூடவே இருக்கும் பார்ட்னர்தான் உங்களின் உண்மையான பலம். அவர்களைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடாதீர்கள். அவர்களுக்கு அன்போடு நன்றி கூறி, இந்த நாளை ஸ்பெஷலாக மாற்றுங்கள்.

312
மிதுனம் - பேச்சால் கவரும் கலை

உங்களின் தனித்துவமான குணத்தால் இன்று புதிய நபர் ஒருவர் உங்கள் மீது ஈர்க்கப்படலாம். தூரத்து உறவில் இருப்பவர்கள் தங்களின் இனிமையான பேச்சின் மூலம் துணையை நெருக்கமாக உணர வைப்பீர்கள். வேலைப்பளுவுக்கு நடுவிலும் குடும்பப் பிரச்சினைகள், திருட்டு போன்ற அச்சுறுத்தல்களில் விழிப்புடன் இருங்கள். காதலி உங்களை விட்டு விலகாதவாறு நெருக்கத்தை அதிகரியுங்கள்; அவர்களின் ஆலோசனைகளுக்கு மதிப்பு கொடுங்கள்.

412
கடகம் - வெளிப்படையான பேச்சு

துணையைப் பிரிந்து விடுவோமோ என்ற தேவையற்ற பயம் உங்களுக்குள் மன உளைச்சலை ஏற்படுத்தலாம். வார்த்தைகளை விட இன்று உங்கள் செயல்களுக்கு அதிக சக்தி உண்டு. தயக்கங்களை உடைத்து உங்கள் பார்ட்னரை அன்போடு கட்டிப்பிடித்து மகிழுங்கள். உங்கள் மனதில் உள்ள ஆசைகளையும், கற்பனைகளையும் அவரிடம் வெளிப்படையாகப் பேசுங்கள்.

512
சிம்மம் - பசுமையான காதல் தோட்டம்

உங்கள் வாழ்க்கையில் காதல் நிறைந்திருப்பதால், இன்று உங்களை மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்வீர்கள். புதிய உறவுகளைத் தொடங்குவதற்கு இன்று ஏற்ற நாள் அல்ல. காதல் தோட்டம் என்றும் பசுமையாக இருக்கத் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். துணையின் ஆசைகளை அறிந்து நிறைவேற்றுங்கள். ஏதேனும் குழப்பம் இருந்தால் துணையின் உதவியை நாடுங்கள், அது உங்களைக் காக்கும்.

Astrology: இனி இவங்களுக்கு ராஜயோகம்! புதன் நட்சத்திரப் பெயர்ச்சியால் அடுத்த 10 நாட்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் 5 ராசிகள் எவை?

612
கன்னி- காபி ஷாப் டேட்டிங்

இன்று மன ரீதியான உறவுகளுக்கு மட்டுமே நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். இது உங்களின் ஒட்டுமொத்த கவலைகளையும் மறந்து சந்தோஷமாக வாழ வழிவகுக்கும். உங்கள் பிஸியான நேரத்திலிருந்து காதலருக்காக நேரம் ஒதுக்குங்கள். ஏதேனும் மனஸ்தாபம் இருந்தால், அவரை ஒரு காபி ஷாப்பிற்கு அழைத்துச் சென்று மனம் விட்டுப் பேசுங்கள். அது உங்களுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.

712
துலாம் - காத்திருக்கும் சர்ப்ரைஸ்

பொருளாதார ரீதியாக சில நெருக்கடிகள் இருந்தாலும், இன்று நீங்கள் முழுக்க முழுக்க ரொமான்ஸ் கனவுகளில் மிதப்பீர்கள். காதலில் ஏற்படப்போகும் புதிய தொடக்கம் துணையுடன் உங்களை மேலும் நெருக்கமாக்கும். உங்களுக்கு நெருக்கமான ஒருவர் உங்கள் பார்ட்னரை மகிழ்ச்சிப்படுத்த உங்களை மாற்ற முயலலாம். இன்று உங்கள் துணையிடமிருந்து ஒரு சர்ப்ரைஸ் பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது, அதற்குத் தயாராக இருங்கள்.

812
விருச்சிகம் - பொன்னான நாள்

இன்று நீங்கள் அதிக ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். உங்களின் சலிப்பான வாழ்க்கைக்குள் காதல் புதிய வசந்தத்தைக் கொண்டு வரப்போகிறது. விதி உங்களுக்காகப் புதிய திருப்பத்தை வைத்திருக்கிறது. எதையும் பேசுவதற்கு முன் நிதானமாக யோசித்துப் பேசுங்கள். காதல் என்பது இருவர் சம்பந்தப்பட்டது என்பதால், துணையின் பக்கமிருக்கும் நியாயத்தையும் புரிந்துகொள்ள முயலுங்கள்.

912
தனுசு - புதிய வரவு

உங்களின் காதல் வாழ்க்கை இன்று அமைதியாகவும், எல்லையற்ற அன்போடும் நகரும். உங்களின் புதிய சூழல் உங்களுக்குப் புதிய நண்பர்களை அறிமுகப்படுத்தும். புதிய நண்பர்களில் ஸ்பெஷலான யாரோ ஒருவர் உங்கள் வாழ்க்கைக்குள் நுழைய வாய்ப்புள்ளது, அதை உற்சாகத்தோடு வரவேற்கத் தயாராகுங்கள். காதலில் எப்போதும் உங்கள் விருப்பமே நிறைவேறாது என்பதால், விட்டுக் கொடுத்துத் திட்டமிட்டுச் செயல்படுங்கள்.

1012
மகரம் - ரகசியக் காதல் வெளிச்சத்திற்கு வரும்

உங்களின் புதிய லுக் மற்றும் தனித்துவமான தோற்றம் காதலுக்குப் ப்ளஸ் பாயிண்டாக அமைந்து, பலரின் பாராட்டுகளைப் பெற்றுத் தரும். புதிய நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். துணையுடன் சேர்ந்து காபி குடிப்பது, பாட்டு கேட்பது என நேரத்தைச் செலவழித்து உறவை பலப்படுத்துங்கள். நீங்கள் ரகசியக் காதலில் இருந்தால், அதை அதிகாரப்பூர்வமாக வெளியே சொல்வதற்கு இதுவே சரியான தருணம்.

1112
கும்பம் - காதலில் கொஞ்சம் மசாலா

உறவை ஒரு பாரமாக நினைக்காமல், வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ரசித்துக் கடப்பீர்கள். சில நேரங்களில் கோடிக்கணக்கான பரிசுகளை விட ஒரு சிறிய ரோஜாப்பூ காதலை அழகாக்கிவிடும். உங்கள் பார்ட்னருக்குப் பிடித்த உணவை நீங்களே சமைத்துக் கொடுத்து அசத்துங்கள். உங்களின் வழக்கமான ரொமான்ஸ் வாழ்க்கையில் கொஞ்சம் சுவாரசியத்தைக் கூட்ட, இன்று புதுமையாக எதையாவது முயற்சி செய்யுங்கள்.

Today Rasi Palan: இன்று விபுவன சங்கடஹர சதுர்த்தி.! விநாயகர் அருள் பெறப்போகும் அதிர்ஷ்ட ராசிகள்.! 12 ராசிகளுக்குமான பலன்கள்.!

1212
மீனம் - உள் அழகின் ஈர்ப்பு

இசை, கலை மற்றும் பேஷன் மீதான உங்களின் ஆர்வம் மற்றவர்களை உங்கள் மீது காதல் கொள்ள வைக்கும். உங்களின் வெளி அழகை விட, உங்களின் நற்குணமும் உள் அழகும்தான் எல்லாரையும் ஈர்க்கிறது. உங்களின் தனித்துவமான பேச்சுத்திறன் காதலை இன்னும் ஆழமாக்கும். எனினும், உறவு மேலும் சிறக்க உங்கள் தரப்பிலிருந்தும் சில சிறிய முயற்சிகளை எடுப்பது நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories