Astrology Today: இன்றைய ராசிபலன்கள்.! இன்று 4 ராசிகளுக்கு ஜாக்பாட்.! 6 ராசிகளுக்கு பணம் வரும் யோகம்.!

Published : Oct 31, 2025, 06:00 AM IST

இந்த தினசரி ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் தொழில், குடும்பம், நிதி நிலையில் ஏற்படவிருக்கும் மாற்றங்களை விவரிக்கிறது. ஒவ்வொரு ராசிக்கும் ஏற்படக்கூடிய வாய்ப்புகள், எளிய பரிகாரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

PREV
112
மேஷம் (Aries)

மேஷ ராசி நேயர்களே, இன்று உங்கள் மனதில் உற்சாகம் அதிகரிக்கும் நாளாக இருக்கலாம். தொழில், வியாபாரம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் உருவாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு உதவி செய்வர்.  இன்று நீங்கள் முக்கிய வேலையில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. இன்று கட்டுப்பாடாக செலவு செய்யவேண்டியது அவசியம். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சிறு நடைபயிற்சி  செய்வது அவசியம். பசுமை நிறம் இன்று உங்களுக்கு நல்லவகையில் இருப்பதாக கருதப்படுகிறது. விநாயகர் வழிபாடு உங்களுக்கு வழிகாட்டும். சந்தேகம் மற்றும் எதிர்பார்ப்பு  ஆகியவற்றை நீக்கினால் நல்ல முடிவுகளை பெற முடியும்.

212
ரிஷபம் (Taurus)

ரிஷப ராசி நேயர்களே இன்று உங்கள் தொழிலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அனுபவம் வாய்ந்தவர்களிடமிருந்து நிதி சார்ந்த முக்கிய ஆலோசனைகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் உறுதியாகவும், பலனளிக்கும் வகையில் அமையும். பண வரவு எப்போதும் உள்ளதை விட அதிகரிக்கும்.புதிய வாய்ப்புகள்  உங்களை தேடி வரும். கணவன்-மனைவி இடையே சிறிய கருத்து வேறுபாடுகள் எழலாம். அதனை அன்புடன் பொறுமையுடனும் கையாள்வது நல்லது. பணியிடத்தில் சக ஊழியரின் ஆதரவு கிடைக்கும். சிவ வழிபாடு தொடர்ந்து செய்வது மிகுந்த நன்மையைத் தரும். தங்கம், நிலம் போன்ற முதலீடுகளில் மிகுந்த சிக்கனத்துடன் செயல்படவும். பரிகாரம்: காலை வேளையில் சிவலிங்கத்திற்கு பால் ஊற்றி வழிபடவும்.

312
மிதுனம் (Gemini)

மிதுன ராசி நேயர்களே, வியாபாரத்தில் இன்று குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்படும். மனதில் உற்சாகமும், நம்பிக்கையும் நிரம்பி வழியும். வாழ்க்கைத் துணையுடனும், நண்பர்களுடனும் இனிய தருணங்களை பகிர்ந்து கொள்ளலாம். பழைய வருத்தங்களை முற்றிலும் மறந்து, புதிய முயற்சிகளைத் தொடங்க இது சரியான நாள். வெளிநாடு அல்லது புதிய இடங்களில் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. குழந்தைகளின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். சூரிய வழிபாடு, மஞ்சள் நிற ஆடை மற்றும் பொருட்கள் பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும். ஒட்டுமொத்தமாக வியாபார முன்னேற்றத்திற்கு சிறந்த நாள். பரிகாரம்: சூரியோதய வேளையில் சூரிய நமஸ்காரம் செய்யவும்.

412
கடகம் (Cancer)

கடக ராசி நேயர்களே, உடல் ஆரோக்கியம் இன்று மிகச் சிறப்பாக இருக்கும். குடும்ப சூழலில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டாலும், அவை நல்ல அன்பான திசையை நோக்கி செல்லும்.  இன்று உங்களுக்கு தொழிலில் புதிய வாய்ப்புகள் திறக்கும். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனதில் தெளிவு பிறக்கும் என்பதால் நிம்மதி உங்கள் வசமாகும். வீட்டில் மேற்கொள்ளும் குலதெய்வ  வழிபாடு மிகுந்த நன்மையைத் தரும். இல்லத்தரசிகளுக்கு மனதில் இருந்த சந்தேகங்கள் நீங்கும்.  உங்களுக்கு கடன் சார்ந்த விஷயங்களில் இன்று கூடுதல் கவனம் தேவை. பரிகாரம்: வீட்டில் தினமும் ஒரு நெய் தீபம் ஏற்றி குலதெய்வத்தை வழிபடவும்.

512
சிம்மம் (Leo)

சிம்ம ராசி நேயர்களே,  இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய திட்டம் தொடங்குவதற்கு இன்று சிறந்த நாள். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்து விளங்கும். பழைய நண்பர்களுடன் தொடர்பு ஏற்படும். நீண்ட நாட்களாக நிலவி வந்த ஒரு முக்கிய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். உங்களுக்கு பண வரவு நிலையாக இருக்கும். சூரிய வழிபாடு தொடர்ந்து செய்வது வெற்றியை அதிகரிக்கும். எந்த காரியத்தையும் தொடங்குவதற்கு முன், அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. மனதில் இருந்த பயங்கள் நீங்கும். பரிகாரம்: சூரிய அஸ்தமன வேளையில் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் பாராயணம் செய்யவும்.

612
கன்னி (Virgo)

கன்னி ராசி நேயர்களே, தொழிலில் பெரிய முன்னேற்றமும், முக்கிய வாய்ப்புகளும் கிடைக்கும். பண வரவு கட்டுப்பாட்டுடன் இருந்தாலும், செலவுகள் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால் முன்கூட்டியே திட்டமிடவும். உங்கள் திட்டங்கள் அனைத்தும் வெற்றி அடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் அதிகரிக்கும். புத்தம் புதிய உறவு அல்லது குழந்தை பாக்கியம் சார்ந்த நல்ல செய்தி வரலாம். சிவ வழிபாடு, பச்சை நிறம் ஆகியவை இன்று உங்களுக்கு சக்தி தரும். பரிகாரம்: பச்சை நிற புடவையில் காயத்ரி மந்திரம் 108 முறை ஜபிக்கவும்.

712
துலாம் (Libra)

துலாம் ராசி நேயர்களே, உங்கள் முயற்சிகள் அனைத்தும் இன்று முன்னேற்றத்தைத் தரும். குடும்பத்தில் சுமூகமான சூழல் நிலவும். உறவுகள் மேலும் வலுப்படும். பண வரவு, பதவி உயர்வு ஆகியவை உங்களை தேடி வரும். பழைய பயணத் திட்டங்களை இப்போது செயல்படுத்தலாம். ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் நினைத்த காரியங்கள் படிப்படியாக நிறைவேறும். காதல், திருமண உறவுகளில் சந்தோஷ தருணங்கள் ஏற்படும். சந்திப்புகள், புதிய அறிமுகங்கள் மூலம் மகிழ்ச்சி பொங்கும். பரிகாரம்: வெள்ளிக்கிழமை என்பதால், மகாலட்சுமிக்கு வெள்ளை பூக்கள் செலுத்தி வழிபடவும்.

812
விருச்சிகம் (Scorpio)

விருச்சிக ராச நேயர்களே, தொழிலில் புதிய பதவி உயர்வு, ஊக்கம் கிடைக்கும். குடும்பத்தில் ஆழமான அமைதியும், ஒற்றுமையும் நிலவும். பால்ய நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வியாபாரம், திட்டங்கள் அனைத்தும் முன்னேற்றம் காணும் நாள். கடன் சார்ந்த பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு கிடைக்கும். சிவ வழிபாடு மற்றும் சிவனின் திருநாமம் உச்சரிப்பது பலம் தரும். உடல் நலம், ஊட்டச்சத்து சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தவும். பரிகாரம்: ருத்ராட்ச மாலையுடன் “ஓம் நமசிவாய” 108 முறை ஜபிக்கவும்.

912
தனுசு (Sagittarius)

தனுசு ராசி நேயர்களே, உங்கள் இலக்குகளை நோக்கிய முயற்சிகள் பலன் தரும். தொழிலில் உயர்வு, புதிய பணி மற்றும் ஊக்கம் கிடைக்கும். குடும்பத்தில் செல்வாக்கு, மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய சந்தேகங்கள் காணாமல் போகும். தொடங்கிய காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். ஆன்மிக வழிபாடு சந்தோஷம் தரும். செங்கதிர் (சிவப்பு) நிறம் வெற்றியைத் தரும். பரிகாரம்: குருவுக்கு வெள்ளை பூக்கள் செலுத்தி, “ஓம் குருவே நமஹ” ஜபிக்கவும்.

1012
மகரம் (Capricorn)

மகர ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு தொழிலில் முன்னேற்றம் தெளிவாகத் தெரியும். வியாபாரத்தில் புதிய சந்திப்புகள், வாய்ப்புகள் அதிகரிக்கும். கடன், பணப் பரிவர்த்தனைகளில் நீங்கள் உறுதியான முடிவுகள் எடுக்கலாம். குடும்பத்தில் புதுமையான மாற்றங்களும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். காரிய வெற்றி உறுதியாகும். பரிகாரங்கள் செய்து செயல்பட்டால் பலன் பன்மடங்கு ஆகும். பரிகாரம்: எள் தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடவும்.

1112
கும்பம் (Aquarius)

கும்ப ராசி நேயர்களே, இன்று தொழில் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். பழைய பிரச்சினைகள் அனைத்தும் தீரும். குடும்பத்தில் சுமூகமான சூழல் ஏற்படும். தம்பதிகள் இடையே புரிதல் ஏற்படும். விட்டு கொடுத்து சென்றால் கூடுதல் பலன் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு பக்கபலமாக இருக்கும். ஆன்மிகப் பணிகளில் சிறந்த முன்னேற்றம் கணாப்படும். அரசு சார்ந்த வேலை மற்றும் பணிகள் வெற்றிகரமாக நடக்கும். உடல் ஆரோக்கியம் மேன்மை அடையும். காதல் வாழ்க்கை இனிமையாக அமையும். பரிகாரம்: சனி பகவானுக்கு கருப்பு எள் தானம் செய்யவும்.

1212
மீனம் (Pisces)

மீன ராசி நேயர்களே, தொழிலில் பல்வேறு மாற்றங்களும், புதிய வாய்ப்புகளும் உருவாகும். நீண்ட நாள் முயற்சிகளுக்கு இன்று நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலைத்திருக்கும். தமபதிகள் இடை நல்ல புரிதல் ஏற்படும். உறவுகள் வலுப்படும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பிடித்தவர்களை சந்திப்பீர்கள் என்பதால் மன அழுத்தம் காணாமல் போகும். நடைபயிற்சி ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சிவ வழிபாடு செய்வது சிறப்பு தரும். பரிகாரம்: குருவுக்கு மஞ்சள் பூக்கள் செலுத்தி, “ஓம் குருவே சரணம்” ஜபிக்கவும்.

Read more Photos on
click me!

Recommended Stories