துலாம் ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு கலவையான நாளாக அமைய வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. பேச்சில் நிதானமும், பொறுமையும் தேவை. இல்லையெனில் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் முடிவதில் தாமதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனரீதியாக அழுத்தம் ஏற்பட இருப்பதால், உங்களை நீங்களே கவனித்துக் கொள்வது நல்லது.
நிதி நிலைமை:
இன்று எதிர்பாராத செலவுகள் நிதி சிக்கல்களை உண்டாக்க வாய்ப்பு இருப்பதால், பணத்தை கவனமாக செலவிடுங்கள். வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் அதிகரிக்கும். கடன் கொடுக்கல், வாங்கல், ஆன்லைன் பரிவர்த்தனைகளின் போது மிக கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக கடன் சார்ந்த விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
தனிப்பட்ட வாழ்க்கை:
சகோதரர்களால் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். தாயின் அன்பு உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். தாய் வழி உறவுகளால் சில செலவுகள் ஏற்படலாம். குடும்ப வாழ்க்கையை மேம்படுத்த தலையணுக்கு அடியில் மஞ்சள் முடிச்சு மற்றும் ஐந்து அரசு இலைகளை வைத்து உறங்குங்கள். காதல் உறவுகளில் சிறு சிறு சண்டைகள் வரலாம்.
பரிகாரங்கள்:
இன்று குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது வெற்றியைத் தரும். குலதெய்வம் தெரியாதவர்கள் அம்மன் வழிபாடை மேற்கொள்ளலாம். ரேணுகா பரமேஸ்வரி அல்லது பைரவரை வணங்குவது இன்றைய பிரச்சனைகளிலிருந்து விடுபட உதவும். ஏழை, எளியவர்கள் இயலாதவர்களுக்கு உதவுவது நேர்மறை பலன்களை அதிகரிக்கும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.