Oct 15 Today Rasi Palan: துலாம் ராசி நேயர்களே, இன்று எதிரிகள் உங்கள சுத்தி வளைப்பாங்க.! கவனமா இருங்க மக்களே.!

Published : Oct 14, 2025, 05:27 PM IST

Today Rasi Palan : அக்டோபர் 15, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
அக்டோபர் 15, 2025 துலாம் ராசிக்கான பலன்கள்:

துலாம் ராசி நேயர்களே, இன்றைய தினம் தொழில் மற்றும் சமூகத்தில் எதிரிகளின் சவால்களை சந்திக்க நேரிடும். உங்கள் தைரியம் மற்றும் புத்திசாலித்தனத்தால் அவற்றை வெல்வீர்கள். உங்களை சங்கடப்படுத்தும் விஷயங்களை கடந்து செல்ல வேண்டியது அவசியம். வீண் அலைச்சலை குறைத்துக் கொள்ளுங்கள். முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்த்து விடுங்கள்.

நிதி நிலைமை:

பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. ஆன்லைன் பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முன்பு கொடுத்த பழைய கடன்கள் திருப்பிக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலர் குழந்தைகளுக்காக செலவு செய்ய நேரிடும். வியாபாரத்தில் ஊழியர்களால் சில செலவுகள் ஏற்படலாம். எனவே இன்றைய தினம் நிதி விஷயங்களில் கவனமாக இருங்கள்.

தனிப்பட்ட வாழ்க்கை:

இன்று திருமண வாழ்க்கை வலுவாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அண்டை வீட்டாருடன் இணக்கத்தை பராமரிக்க வேண்டியது அவசியம். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில் தடைகள் வந்து நீங்கும். உறவினர்களுடன் பேசும்பொழுது பொறுமை அவசியம். பெற்றோருடன் அனுசரித்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படும்.

பரிகாரங்கள்:

இன்றைய தினம் மகாலட்சுமி அல்லது துர்கை தேவியை வழிபடுங்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மை தரும். குலதெய்வ வழிபாடு செய்வது காரியத் தடைகளை விலக்கும். முன்னோர்களை வழிபடுவது நல்லது. ஏழை எளியவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories