தனுசு ராசி நேயர்களே, இன்றைய நாள் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய நபர்களின் நட்பு ஏற்பட வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் அல்லது வெளிநாடு தொடர்பான தொழில் செய்து வருபவர்களுக்கு அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். அதை சமாளிக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உடல்நல சோர்வு ஏற்பட்டு நீங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
நிதி நிலைமை:
நிதி நிலைமையில் இன்று கூடுதல் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. முதலீடு செய்ய நினைத்தால் சாதகமான நாளாக இருக்கும். ஆனால் அனுபவமிக்கவர்களின் ஆலோசனையுடன் செயல்பட வேண்டும். கைக்கு வந்து சேர வேண்டிய பணம் தாமதமாக கிடைக்கலாம். முன்பு கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கடன் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள். நிலுவையில் உள்ள பணம் திரும்ப கிடைக்கும்.
தனிப்பட்ட வாழ்க்கை:
கணவன் மனைவிக்கு இடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் முடிவுக்கு வரும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தேவையான நல்ல திட்டங்களில் முதலீடு செய்வீர்கள். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும். அடுத்தவர்களின் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது.
பரிகாரங்கள்:
இன்று அனுமனை வழிபடுவது ஆற்றலையும், தைரியத்தையும் வழங்கும். மகாலட்சுமியை வணங்குவது நிதி நிலைமையை மேம்படுத்தும். வாகன பயன்பாட்டின் பொழுது கூடுதல் கவனம் தேவை. ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது மன அமைதிக்கு உதவும். யாசகர்கள், ஏழை, எளியவர்களுக்கு உதவுவது நற்பலன்களைக் கூட்டும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.