Nov 06 Today Rasi Palan: துலாம் ராசி நேயர்களே, இன்று எதிர்பாராத வழிகளில் பணம் வரும்.! ஆனாலும் ஒரு ட்விஸ்ட் இருக்கு.!

Published : Nov 05, 2025, 05:09 PM IST

Today Rasi Palan : நவம்பர் 06, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
நவம்பர் 06, 2025 துலாம் ராசிக்கான பலன்கள்:

துலாம் ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான வாய்ப்பும், அதே சமயம் மனக் குழப்பம் நிறைந்த நாளாகவும் இருக்கும். எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்காமல் அமைதியுடனும் சமநிலையுடனும் செயல்பட வேண்டிய நாள். உங்கள் கடின உழைப்புக்கான பலன்கள் சிறிது தாமதமாக கிடைக்கலாம். இருப்பினும் பொறுமையாக இருங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும். பயணத்தின் போது அல்லது வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை.

நிதி நிலைமை:

நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். வியாபாரத்தில் உள்ளவர்கள் நிதானமாகவும், சாமர்த்தியமாகவும் பேசி லாபத்தை காணலாம். இன்று திடீர் பண வரவால் மன அழுத்தம் குறையும். பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான நேரம். ஆனால் அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவது நல்லது.

தனிப்பட்ட வாழ்க்கை:

திருமணம் ஆனவர்களுக்கு துணையின் ஆதரவு சமநிலையை மீட்டெடுக்க உதவும். உறவுகளில் வாக்குவாதம் எழும் பொழுது அதிகம் பேசுவதை தவிர்த்து விடுங்கள். காதல் மற்றும் உறவுகளில் தொடர்ச்சியான குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், நிதானமாக செயல்படுங்கள். குழந்தைகளின் பொறுப்புகள் அல்லது எதிர்கால நலன் குறித்து சிந்திக்க நேரிடும்.

பரிகாரங்கள்:

இன்று சக்கரத்தாழ்வாரை வழிபடுவது மனதில் இருக்கும் குழப்பங்களை நீக்கும். மகாலட்சுமி தாயாரை வழிபடுவது நன்மைகளைத் தரும். ஏழை எளியவர்கள் இயலாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories