துலாம் ராசி நேயர்களே, இன்று நீங்கள் அமைதியாகவும், பொறுமையாகவும் இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சற்று தாமதத்தை சந்திக்கலாம். இருப்பினும் முடிவில் வெற்றி கிடைக்கும்.
செய்யும் வேலையில் கவனக்குறைவு அல்லது விஷயங்களில் ஆர்வமின்மை ஏற்படலாம். எனவே தெளிவான சிந்தனையுடன் காரியங்களை செய்வது நன்மை தரும்.
நிதி நிலைமை:
பண வரவு இன்று சிறப்பாக இருக்காது. செலவுகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது, கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு அன்றைய தேவைகளை பூர்த்தி செய்து, புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். அதிக ரிஸ்க் உள்ள முதலீடுகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
தனிப்பட்ட வாழ்க்கை:
உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உணர்ச்சிபூர்வமாக நடந்து கொள்வீர்கள். முடிந்தவரை துணையுடன் பேசாமல் இருப்பது நல்லது. அப்படியே பேசினாலும் அமைதியும், மென்மையும் கடைபிடிக்கவும். இன்றைய தினம் குடும்ப வாழ்க்கையில் சவால்கள் நிறைந்த நாளாக இருக்கலாம்.
பரிகாரங்கள்:
நரசிம்மரை வழிபடுவது தைரியத்தையும், ஆற்றலையும் தரும். ஏற்படும் தடைகளில் இருந்து உங்களை பாதுகாப்பதற்கு அனுமன் வழிபாடு உதவும். இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.