தனுசு ராசி நேயர்களே, இன்றைய தினம் உங்கள் தன்னம்பிக்கை மற்றும் உற்சாகம் அதிகரிக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
வேலையை சரியாக செய்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலை அல்லது வியாபாரம் செய்வது தொடர்பாக வெளிநாடு பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு கிடைக்கலாம்.
நிதி நிலைமை:
நிதி நிலைமை இன்று சீராக இருக்கும். வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு மிகச் சிறப்பான நாளாக இருக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். விரய ஸ்தானமான 12ஆம் வீட்டில் கிரகங்கள் இருப்பதால் எதிர்பாராத செலவுகளை சந்திக்க நேரிடலாம். எனவே பண விஷயங்களில் எச்சரிக்கை தேவை.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்ப வாழ்க்கையில் நிலைத்தன்மை காணப்படும். விட்டுக் கொடுத்துச் செல்வதும், பொறுப்புடன் நடந்து கொள்வதும் உறவை வலுப்படுத்தும். காதல் உறவுகளில் சவால்கள் வரலாம். கடின உழைப்பு மற்றும் புரிதலுடன் உறவை கையாள வேண்டியது அவசியம். திருமணமானவர்களுக்கு உறவில் இருந்த இறுக்கம் குறையும்.
பரிகாரங்கள்:
இன்று ஐயப்பனை தரிசிப்பது மிகவும் நல்லது. ஐயப்ப பக்தர்கள் நடத்தும் பஜனைகளில் கலந்து கொள்ளலாம். பாதயாத்திரையாஆக செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகள் அல்லது அன்னதானம் செய்வது அனுகூலத்தை தரும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.