பட்ஜெட்டுல உஷாரா இருக்கணும்; வேலை மாற்றம் வரும் – துலாம் ராசிக்கான பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2026!

Published : Feb 04, 2026, 08:58 PM IST

Thulam Rasi February Month Rasi Palan 2026 in Tamil : துலாம் ராசிக்கான பிப்ரவரி மாத ராசி பலன்கள் எப்படி இருக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் முழுவதுமாக பார்க்கலாம்.

PREV
13
துலாம் ராசி பிப்ரவரி மாத பொதுப்பலன்கள்

பிப்ரவரி மாத கிரக நிலைகளின் அடிப்படையில் துலாம் ராசியினருக்கு ஏற்ற இறக்கம் நிறைந்த மாதமாக இருக்கலாம். இந்த மாதத்தின் தொடக்கத்தில் சுக்கிரன், புதன் மற்றும் சூரிய பகவான் உங்களுக்கு 4ஆவது வீட்டில் சஞ்சாரம் செய்கிறார்கள். பின்னர் பிற்பாதியில் 5ஆவது இடத்திற்கு இந்த கிரகங்களின் சஞ்சாரம் இருக்கும். இதே போன்று சனி 6ஆவது வீட்டிலும், ராகு 5ஆவது வீட்டிலும், குரு 9ஆவது வீட்டிலும், கேது 11ஆவது வீட்டிலும் சஞ்சாரம் இருக்கும். 

23
துலாம் ராசி மாத பலன் 2026

இந்த சஞ்சாரங்களின் அடிப்படையில் துலாம் ராசியினருக்கு உடல் ஆரோக்கிய பிரச்சனை ஏற்படக் கூடும். குறிப்பாக வயிறு தொடர்பான பிரச்சனை வரக் கூடும். வெளியிடங்களில் சாப்பிடுவதையும், நேரம் தாழ்த்தி சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். காதல் ஜோடிகளுக்கு மகிழ்ச்சியான மாதமாக இருக்கும்.

33
துலாம் ராசி பிப்ரவரி மாத ராசி பலன் 2026

ஆனால், கணவன் மனைவிக்கிடையில் சிறு சிறு சண்டை சச்சரவுகள் வரக் கூடும். அலுவலகத்தில் ஊழியர்களுக்கு சவால் நிறைந்த மாதமாக இருக்கும். ஒரு சிலருக்கு வேலை மாற்றமும் வரலாம். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வமின்மை வரலாம். அம்மாவின் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். வெளியூர், வெளிநாடு சென்று வருவீர்கள். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories