ராகு மற்றும் செவ்வாய் சேர்க்கை – கண்டத்தில் சிக்க போகும் டாப் 3 ராசிகள்; செய்ய வேண்டிய பரிகாரம் இதோ!

Published : Feb 04, 2026, 07:03 PM IST

Top 3 Unlucky Zodiac Signs After 23rd February 2026 : கும்ப ராசியில் ராகு மற்றும் செவ்வாய் இணைவு ஜோதிடத்தில் 3 ராசியினருக்கு சற்று சோதனை காலமாக அமைந்துள்ளது. அந்த ராசியினர் யார் யார் என்று பார்க்கலாம்.

PREV
15
ராகு மற்றும் செவ்வாய் சேர்க்கை

பொதுவாக ஜோதிடத்தில் கிரகங்களின் இடப்பெயர்ச்சி காரணமாக ஒவ்வொரு ராசியினரும் பலன்களை அனுபவித்து வருகின்றனர். அதில் கிரகங்களின் இடப்பெயர்ச்சி சாதகமாக இருந்தால் சாதகமான பலனையும், சாதகமற்ற நிலையில் இருந்தால் அசுப பலன்களையும் கொடுக்கும். இதில் இந்த மாதம் நிகழும் ராகு மற்றும் செவ்வாய் இணைவு 3 ராசியினருக்கு பாதிப்பை ஏற்படுத்த போகிறது. செவ்வாய் மற்றும் ராகுவின் இணைவு வரும் 23ஆம் தேதி கும்ப ராசியில் நடக்கிறது.

25
கண்டத்தில் சிக்க போகும் டாப் 3 ராசிகள்

கும்ப ராசியை செவ்வாய் ஆட்சி செய்கிறது. கிரகங்களின் தளபதியான செவ்வாய் கும்ப ராசிக்குள் நுழைவார். எனவே, கும்ப ராசியில் செவ்வாய் மற்றும் ராகுவின் சேர்க்கை மிகவும் செல்வாக்கு மிக்கதாகக் கருதப்படுகிறது. சனி பகவானின் ராசியான கும்ப ராசியில் ஏற்கனவே ராகு சஞ்சாரம் செய்கிறார். அதோடு வரும் 23 ஆம் தேதி செவ்வாயும் இணைகிறது. சனியின் வீட்டில் செவ்வாய் மற்றும் ராகுவின் இந்த இணைவு மிகவும் சக்திவாய்ந்ததாகவும் ஆபத்தானதாகவும் கருதப்படுகிறது. இந்த சேர்க்கை காரணமாக 3 ராசியினர் கவனமாக இருக்க வேண்டும். அந்த ராசியினர் மேஷம், மீனம் மற்றும் மகரம் ராசியினர் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

35
மேஷ ராசிக்கான பலன்:

செவ்வாய் மற்றும் ராகுவின் சேர்க்கையானது மேஷ ராசியினருக்கு அசுப பலன்களை அள்ளி கொடுக்க போகிறது. ஆம், பொருளாதாரத்தில் பற்றாக்குறை, மன அழுத்தம் ஏற்படக் கூடும். வீண் விரையச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் வாக்கு வாதம் ஏற்படக் கூடும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இழக்க நேரிடும். மேஷ ராசியினருக்கு இந்த பிரச்சனையெல்லாம் சரியாக அனுமன் வழிபாடு சிறப்பான பலன் அளிக்கும். தினமும் காலையில் சூரிய பகவான் வழிபாடு செய்ய எல்லாமே நல்லதாக நடக்கும்.

45
மீனம் ராசிக்கான பலன்:

ராகு மற்றும் செவ்வாயின் சேர்க்கையானது மீன ராசியினருக்கு மனக் கவலையை ஏற்படுத்தும். குடும்பத்தில் அடுக்கடுக்கான பிரச்சனைகள் வரக் கூடும். கணவன் மனைவிக்கிடையில் வீண் வாக்குவாதம் ஏற்படக் கூடும். குழந்தைகளின் படிப்பு உள்பட எதிர்காலம் பற்றிய கவலை ஏற்படும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. இல்லையென்றால் விபத்து ஏற்படக் கூடும். தினந்தோறும் சிவன் கோயிலுக்கு சென்று வர எல்லா நன்மையும் உண்டாகும். ஏழைகளுக்கு வெள்ளை மற்றும் மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்வது நல்லது.

55
மகரம் ராசிக்கான பலன்:

கும்பத்தில் ராகு மற்றும் செவ்வாயின் இணைவு மகரம் ராசியினருக்கு சோதனைக்கான காலமாக மாறியுள்ளது. இன்னும் 19 நாட்களில் எல்லாமே தலைகீழாக மாறப் போகுது. மற்றவர்கள் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். வேலைப்பளு அதிகரிக்க கூடும். கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பழைய பிரச்சனை மீண்டும் தலை தூக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தினந்தோறும் கொடி மரத்தின் கீழ் விளக்கேற்றி வழிபாடு செய்ய எல்லா நன்மையும் உண்டாகும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories