இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கை சிம்ம ராசியிலேயே உருவாவதால் இந்த ராசிக்காரர்களுக்கு முக்கியமான காலமாகக் கருதப்படுகிறது. தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், முன்பு இருந்ததைவிட பொருளாதார நிலை மேம்படலாம். புதிய வீடு அல்லது வாகனம் வாங்க வேண்டும் என்ற நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கலாம். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கலாம் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.