சர்வ அமாவாசையான இன்று சனி பெயர்ச்சி.! சித்திரை அமாவாசையில் நடக்கும் அதிசயம்.! கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?

Published : Apr 17, 2026, 11:15 AM IST

Thirunallar Sani Peyarchi 2026 Palangal : பாரபவ வருடத்தின் முதல் அமாவாசையான சித்திரை அமாவாசையில் சனி பகவான் ஒரு அரிய நிகழ்வை நடத்த இருக்கிறார். இதனால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
17
Thirunallar Sani Peyarchi 2026 Palangal

ஜோதிடத்தில் சனி பகவான் நீதிமானாக அறியப்படுகிறார். இவர் நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை வழங்குகிறார். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றும் அவர், குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது நட்சத்திரத்தையும் மாற்றுகிறார். அந்த வகையில் பாரபவ வருடத்தின் முதல் அமாவாசையான சித்திரை அமாவாசையில் (ஏப்ரல் 17 ஆம் தேதி) அவர் தனது நட்சத்திரத்தை மாற்றுகிறார்.

27
சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர பெயர்ச்சி

இன்று முதல் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நுழைந்து தனது பயணத்தைத் தொடங்குகிறார். இவர் இந்த நட்சத்திரத்தில் மே 17ஆம் தேதி வரை பயணிப்பார். அதன் பின்னர் ரேவதி நட்சத்திரத்திற்கு மாறுகிறார். சனி பகவானின் ராசி மாற்றத்தைப் போலவே, நட்சத்திர மாற்றமும் பலருக்கும் நன்மையை ஏற்படுத்த இருக்கிறது. சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் இருக்கும் இந்த ஒரு மாத காலம் நான்கு ராசிக்காரர்களுக்கு சிறப்பான நன்மைகள் கிடைக்க உள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார்? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

37
மிதுனம்

சனி பகவானின் நட்சத்திர மாற்றத்தால் மிதுன ராசிக்காரர்கள் தொழில் மற்றும் நிதி ரீதியான நன்மைகளைப் பெறுவீர்கள். தொழிலில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு காரியங்களும் வெற்றியில் முடியும். முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கப்படும். உபரி வருமானத்திற்கான வழிகள் உருவாகும். இதுவரை திசை தெரியாமல் இருந்து வந்தவர்கள் சரியான திசையில் பயணத்தை தொடங்குவீர்கள். வணிகத்தில் எதிர்பாராத வளர்ச்சி கிடைக்கும். நிதி ரீதியான சிக்கல்கள் தீரும். கைக்கு வராமல் இருந்த பணம் வந்து சேரும். உறவுகளில் நீடித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தம்பதிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வந்து, ஒற்றுமை மேலோங்கும்.

47
சிம்மம்

சனி பகவான் தனது நிலையை மாற்ற இருப்பதால், சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கையில் புதிய திருப்பங்களை சந்திப்பீர்கள். இதுவரை கஷ்டங்களை மட்டுமே அனுபவித்து வந்தவர்கள் அதிலிருந்து நிரந்தர விடுதலை பெறுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை என அனைத்திலும் அடுத்தடுத்து நல்ல செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் இதுவரை உங்களை தொந்தரவு கொடுத்து வந்த அதிகாரிகள் அல்லது சக ஊழியர்கள் வேலையில் இருந்து மாற்றப்படுவார்கள். வேலையில் கூடுதல் கவனம் செலுத்தி வெற்றிகளைப் பெறுவீர்கள். அதன் பலனாக பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம். தொழிலில் இருந்து போட்டியாளர்கள் விலகுவதால் உங்கள் கை உயரும்.

57
கன்னி

சனி பகவானின் நட்சத்திர மாற்றமானது கன்னி ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை வழங்க உள்ளது. கன்னி ராசிக்காரர்களின் செல்வம் என்ற காலகட்டத்தில் அபரிமிதமாக பெருகும். சொத்து தகராறுகள் முடிவுக்கு வரும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். அரசு தொடர்பான வேலையில் இருந்த தடைகள் அகலும். தந்தை வழியில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மாமனார் அல்லது மைத்துனர் வழியில் இருந்து எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்திற்குத் தேவையான சில முக்கிய முடிவுகளை எடுத்து வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.

67
மகரம்

மகர ராசியின் அதிபதியான சனி பகவான் மகர ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை வாரி வழங்க இருக்கிறார். குறிப்பாக வணிகர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். தேவையில்லாமல் ஏற்பட்டு வந்த செலவுகள் குறையும். மருத்துவ செலவுகள் கணிசமாக குறையும். வீட்டில் பணம் சேரும். வங்கி இருப்பு உயரும். பொறுமையாகவும், நிதானமாகவும் விஷயங்களை கையாண்டு வெற்றி பெறுவீர்கள். உங்களை மனதளவில் வருத்தி வந்த விஷயங்கள் அனைத்தும் முடிவு பெறும். மற்றவர்களுடன் இருக்கும் பிரச்சனையை பேசி சரி செய்வீர்கள். சமூக தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

77
பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

Read more Photos on
click me!

Recommended Stories