Sun Transit: வைகாசி மாதம் முழுவதும் சூரிய பகவான் 4 ராசிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப்போகிறார்.! உங்க ராசி இருக்கா?

Published : May 15, 2026, 12:24 PM IST

Sun Transit in Taurus Lucky Zodiac Signs: சூரிய பகவானின் ஆசியால் வைகாசி மாதம் முழுவதும் நான்கு ராசிக்காரர்களுக்கு அளவில்லாத நன்மைகள் கிடைக்க உள்ளது. அந்த ராசிகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
15
Sun Transit in Taurus Lucky Zodiac Signs

வேத ஜோதிடத்தில் சூரிய பகவான் கிரகங்களின் ராஜாவாக அறியப்படுகிறார். அவர் ஒவ்வொரு முறையும் தனது ராசியை மாற்றும் பொழுது தமிழ் மாதம் பிறக்கிறது. அந்த வகையில் சூரிய பகவான் மே 15ஆம் தேதி மேஷ ராசியிலிருந்து வெளியேறி ரிஷப ராசிக்குள் நுழைய இருக்கிறார். சூரிய பகவானின் பெயர்ச்சியால் நான்கு ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை பெற உள்ளனர். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்: வைகாசி மாத ராசிபலன் 2026.! மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்குமான துல்லியமான கணிப்புகள்.!

25
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு வைகாசி மாதமானது மிகவும் சிறப்பானதாக இருக்கும். இத்தனை நாட்களாக கடன் பிரச்சனையில் தவித்து வந்தவர்களுக்கு அதிலிருந்து முழுமையான விடுதலை கிடைக்கும். வீடு, வாகனம் போன்ற புதிய சொத்துக்களை வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். பரம்பரை சொத்துக்கள் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். கடனாகக் கொடுத்த பணம் திரும்ப கைக்கு வந்து சேரும். வருமானத்தில் கணிசமான உயர்வை எதிர்பார்க்கலாம். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து, கௌரவம் உயரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

இதையும் படியுங்கள்: இன்று தொடங்கும் சுக்கிர திசை.! 4 ராசிகளுக்கு அளவில்லாத நன்மைகள் கிடைக்கபோகுது.! பொன், பொருள், வசதிகள் குவியும்.!

35
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு வைகாசி மாதமானது வாழ்க்கையில் புதிய மகிழ்ச்சியைக் கொண்டு வரும். குடும்பத்தில் இருந்து வந்த தகராறுகள், பிரச்சனைகள் முடிவுக்கு வந்து ஒற்றுமை மேலோங்கும். நிதிநிலைமை சிறப்பானதாக மாறும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுதலைப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் இருந்து வருமானம் வரும். சகோதரர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும்.

45
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு வைகாசி மாதம் சுப பலன்களை வாரி வழங்கும். தொழிலதிபர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக சிக்கி இருந்த பணம் கைக்கு வந்து சேரும். புதிய முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்புக்கான அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்ய இது உகந்த காலமாகும்.

55
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு வைகாசி மாதம் நல்ல பலன்களைத் தரும். தொழிலில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். நேர்மையுடனும், விடாமுயற்சியுடன் செய்யும் வேலைகள் வெற்றியைத் தரும். உங்கள் வாழ்க்கை குறித்த கண்ணோட்டம் மாறும். குடும்பத்தினருக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மன மகிழ்வீர்கள். தந்தை வழி உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிட்டும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமண பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories