Shani Amavasya 2026: மே 16 சனி அமாவாசை! சந்திரனின் இரட்டைப் பெயர்ச்சியால் பண மழையில் நனையப் போகும் 5 ராசிகள்!

Published : May 15, 2026, 09:19 AM IST

Shani Amavasya: சனி அமாவாசை அன்று நிகழும் சந்திரனின் இரட்டை பெயர்ச்சியால், குறிப்பிட்ட 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டகரமான காலம் தொடங்குகிறது. இந்த கிரக மாற்றங்களால் மிதுனம், கும்பம் உள்ளிட்ட 5 ராசியினர் வாழ்வில் பெரும் முன்னேற்றங்களைக் காண்பார்கள்.

PREV
17
சனி அமாவாசை

ஜோதிட சாஸ்திரத்தில் நீதியை வழங்கும் கிரகமாக கருதப்படும் சனி பகவான் அவதரித்த தினமே சனி ஜெயந்தி அல்லது சனி அமாவாசை என்று போற்றப்படுகிறது. இந்த ஆண்டு மே 16-ம் தேதி சனிக்கிழமை இந்த விசேஷ நாள் அமைகிறது. அன்று சனி பகவானின் அருளோடு, சந்திர பகவானும் தனது நிலையில் இரட்டை பெயர்ச்சி நடைபெறுகிறது.

27
சந்திரனின் அபூர்வ நகர்வு

மே 16 அன்று மாலை 5:29 மணிக்கு சந்திரன் கிருத்திகை நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். அதனைத் தொடர்ந்து இரவு 10:46 மணிக்கு ரிஷப ராசிக்கு இடம்பெயர்கிறார். இந்த கிரக மாற்றங்கள் ஒட்டுமொத்த ராசி மண்டலத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்தினாலும், பின்வரும் 5 ராசிகளுக்குப் பொற்காலமாக அமையப்போகிறது.

37
மிதுனம்: பொருளாதாரப் புரட்சி

மிதுன ராசியினருக்கு இந்த சனி அமாவாசை புதிய விடியலைத் தரும். நீண்ட நாட்களாகப் இழுபறியில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். உயர் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவதோடு, பதவி உயர்வுக்கான கதவுகளும் திறக்கும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி பெறுவீர்கள். வெளிநாடு செல்லும் யோகமும், அந்நிய முதலீடுகள் மூலம் லாபமும் பெருகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

47
கும்பம்: வெற்றிக் கனிகள்

சனி பகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்கு இது மிகவும் சாதகமான காலம். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு புதிய முயற்சியும் வெற்றியில் முடியும். உங்களின் கடின உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் சமூகத்தில் கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா செல்லத் திட்டமிடுவீர்கள். நிதி நிலை முன்பை விட பல மடங்கு வலுவடையும்.

57
தனுசு: அதிர்ஷ்டத்தின் கதவுகள்

சனி அமாவாசை நாளில் நடக்கும் சந்திரன் இரட்டை பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த த்ரிவேணி சங்கமம் போன்ற கிரக நிலைகள் மங்களகரமான மாற்றங்களை உருவாக்கும். எதிர்பாராத பண வரவு உங்களை ஆச்சரியப்படுத்தும். வருமானத்தை உயர்த்தப் புதிய வழிகள் தென்படும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரித்து, மன அமைதி பெறுவீர்கள். இழந்த தன்னம்பிக்கை மீண்டும் துளிர்விடும், தடைப்பட்ட காரியங்கள் வேகம் எடுக்கும். ஒட்டுமொத்தமாக தனுசு ராசிக்காரர்களுக்கு சனி அமாவாசை நாளில் அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது.

67
மகரம்: சொத்து சேர்க்கை

சனி பகவானின் ஆதிக்கம் நிறைந்த மகர ராசிக்கு இது லாபகரமான திருப்புமுனை. கடந்த கால முதலீடுகள் இப்போது வட்டியும் முதலுமாக இரட்டிப்பு லாபத்தைத் தரும். புதிய வீடு அல்லது நிலம் வாங்கும் கனவு நனவாகும். தங்கம் மற்றும் ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும்.

77
துலாம்: ராஜயோகப் பலன்கள்

துலாம் ராசியினருக்குத் தொழிலில் வியக்கத்தக்க முன்னேற்றங்கள் காத்திருக்கின்றன. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து தொடர்பான வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் கடினமான இலக்குகளையும் எளிதில் அடைவீர்கள். முதலீடுகளில் இருந்து எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைப்பதால் வங்கி இருப்பு உயரும்.

Read more Photos on
click me!

Recommended Stories