Surya Grahan 2026 Unlucky Zodiac Signs : பிப்ரவரி 17 அன்று ஏற்பட்ட சூரிய கிரகணத்தின் தாக்கம் இன்னும் முழுமையாக முடியவில்லை. இதன் விளைவுகள் மார்ச் 4 வரை நீடிக்கும். அடுத்த 15 நாட்களுக்கு ஐந்து ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் பிப். 17 ஆம் தேதி பிற்பகல் 3:11 மணிக்குத் தொடங்கி, மாலை 7:57 வரை நிகழ்ந்தது. இருப்பினும் இதன் தாக்கம் இன்னும் முழுமையாக முடியவில்லை. சூரிய கிரகணத்தின் தாக்கம் சுமார் ஒரு மாதங்கள் வரை நீடிக்கலாம். அந்த வகையில் மார்ச் 4 வரை கிரகணத்தின் தாக்கம் நீடிக்க இருக்கிறது. ஹோலி பண்டிகையுடன் கிரகணத்தின் விளைவுகள் முழுமையாக முடிவடையும்.
26
சிம்மம்
சூரிய கிரகணத்தின் தாக்கம் உங்களுக்கு சவாலாக இருக்கும். அடுத்த 15 நாட்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தன்னம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது. தொழில் அல்லது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம். உங்களது அவசர புத்தியால் கடுமையான சிக்கல்களில் சிக்கிக் கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது. மேலதிகாரிகளுடன் சண்டை ஏற்படலாம். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
36
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணத்தின் தாக்கம் குறிப்பிடத்தக்க சிக்கல்களை ஏற்படுத்தும். தேவையற்ற செலவுகள் மற்றும் முதலீடுகள் அதிகரிக்கலாம். காயங்கள் மற்றும் விபத்துகளின் அபாயம் அதிகம். நிதி இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாகனம் ஓட்டும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும். கடன் வாங்குதல் அல்லது கொடுத்தல் கூடாது.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அடுத்த 15 நாட்கள் மிகவும் சவாலானாதாக இருக்கும். முதலீடு மற்றும் செலவுகளில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முயற்சிப்பது சிக்கலை ஏற்படுத்தும். வீடு, நிலம் அல்லது சொத்து விவகாரங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிறு அலட்சியம் கூட பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தலாம். தவறான நபர்களுடன் பழகுவது கடுமையான பிரச்சனைகளை கொண்டு வரும்.
56
கும்பம்
கும்ப ராசியில் சூரிய கிரகணம் நிகழ்ந்து இருப்பதால், கும்ப ராசியினருக்கு இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். மன அழுத்தம் அதிகரிக்கலாம். குடும்ப வாழ்வில் சமநிலையுடன் இருங்கள். அடுத்த 15 நாட்களுக்கு பெரிய ரிஸ்க் எடுக்க வேண்டாம். வாக்குவாதங்களை தவிர்க்கவும் உடல் ஆரோக்கியம் குறையக்கூடும். எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். புதிய திட்டங்கள் தொடங்குவதை அடுத்த 15 நாட்களுக்கு தள்ளி வைக்கவும்.
66
மீனம்
சூரிய கிரகணத்தின் தாக்கம் மீன ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும். ஏமாற்றப்பட வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிடலாம். நாள்பட்ட நோய் தொந்தரவு செய்யலாம். நீங்கள் பலவீனமாகவோ அல்லது சோர்வாகவோ உணர்வீர்கள். அடுத்த 15 நாட்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை எழுந்து கொண்டே இருக்கும். நாள்பட்ட நோய்கள் மீண்டும் தலை தூக்கக்கூடும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)