Suriyan Peyarchi 2026 Palangal : ஏப்ரல் 14, 2026 ஆம் ஆண்டு சூரிய பகவான் தனது உச்ச ராசியான மேஷ ராசியில் பிரவேசிக்க இருக்கிறார். இதனால் பலன்பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
வேத ஜோதிடத்தில் சூரிய பகவான் கிரகங்களின் ராஜாவாக அறியப்படுகிறார். அவர் ஆன்மா, ஆற்றல், தலைமைத்துவம் மற்றும் வெற்றியின் காரகராக கருதப்படுகிறார். அவர் ஒரு மாதத்திற்கு ஒருமுறை தனது ராசியை மாற்றுகிறார். அவர் ராசியை மாற்றும் போதெல்லாம் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் ஏப்ரல் 14, 2026 காலை 9:38 மணிக்கு அவர் மேஷ ராசியில் பெயர்ச்சியாகிறார். மேஷ ராசி சூரிய பகவானின் உச்ச வீடாகும். இதனால் அவரது பலன்கள் சில ராசிகளுக்கு முழுமையாக வெளிப்பட இருக்கிறது. அந்த ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
26
மேஷம்
சூரியனின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மை தரும். உங்கள் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் சூரிய பகவான் பிரவேசிப்பதால், ஆளுமைத் திறன் மேம்படும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மாற்றங்கள் ஏற்படக்கூடும். மாணவர்கள் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெறுவார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அதிகாரமிக்க பதவிகளில் அமர்வதற்கான வாய்ப்புகள் உண்டு. குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகள் வந்து சேரும்.
36
சிம்மம்
சூரியனின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் கொண்டு வரும். கௌரவமான பதவிகள் கிடைக்கலாம். சிம்ம ராசியை சூரிய பகவான் ஆள்வதால் இந்த ராசிக்காரர்கள் சூரிய பெயர்ச்சியால் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவீர்கள். மேலும் சூரிய பகவான் ஒன்பதாம் வீடான அதிர்ஷ்ட ஸ்தானம் வழியாக பெயர்ச்சி அடைவதால், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு பலன்களைத் தருவதாக அமையும். வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள், தடைகள் அனைத்தும் விலகி, புதிய உற்சாகத்துடன் நடை போடுவீர்கள்.
சூரியனின் மேஷ ராசி பெயர்ச்சி காரணமாக துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு நல்ல காலம் பிறக்க இருக்கிறது. வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். விரும்பிய இடம் மாற்றம் கிடைப்பதற்கோ அல்லது ஒரு குழுவை தலைமை தாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் வல்லுனர்களுக்கு வெற்றிகரமான காலமாக அமையும். ஆன்மீக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மன அமைதி அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த தகராறுகள் பேசி சரி செய்யப்படும்.
56
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியனின் பெயர்ச்சி முன்னேற்றத்திற்கான புதிய வழிகளைத் திறக்கும். எதிர்பாராத வருமானம் மற்றும் வெற்றிக்கான வாய்ப்புகள் உண்டு. தனுசு ராசியின் ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் வழியாக சூரிய பகவான் பெயர்ச்சி அடைகிறார். இந்த அமைப்பானது உங்கள் குடும்பம் மற்றும் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டு வரும். புதிய வருமான வழிகள் திறக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பண வரவு அதிகரிக்கும். பொருளாதார நிலைமை உயரும். குழந்தைகள் வழியாக நல்ல செய்திகளைக் கேட்பீர்கள்.
66
மகரம்
சூரிய பகவான் மேஷ ராசியில் பெயர்ச்சி அடைவது மகர ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அளிக்கும். அரசுத் துறையில் இருப்பவர்கள் சிறப்பான நன்மைகளைப் பெறுவீர்கள். காதல் மற்றும் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். மாணவர்கள் கல்வித்துறையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. பழைய கடன்களில் இருந்து விடுபட்டு நிம்மதி பெறுவீர்கள். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு நல்ல சூழல் உருவாகும். சிறிய அளவில் தொழில் செய்து வருபவர்கள் பெரிய அளவில் விரிவாக்கம் செய்வீர்கள். வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் சொந்த வீட்டிற்கு மாறும் வாய்ப்புகள் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)