கும்ப ராசியில் சூரிய பெயர்ச்சி: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்! Surya Peyarchi 2026

Published : Feb 11, 2026, 08:35 PM IST

Sun Transit in Aquarius Predictions for Top 5 Lucky Zodiac Signs:நவகிரகங்களின் அரசனான சூரிய பகவான், ராகு மற்றும் சுக்கிரன் சஞ்சரிக்கும் கும்ப ராசிக்குள் நுழைகிறார். இந்த கிரக மாற்றத்தினால் பணவரவு, அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் ராசிகள் பற்றி பார்க்கலாம்.

PREV
16
Sun Transit in Aquarius Predictions for Top 5 Lucky Zodiac Signs

ஜோதிட ரீதியாக கும்ப ராசியில் சில முக்கிய கிரகங்களின் சேர்க்கை நிகழ்கிறது. கும்பத்தின் ராகு, சுக்கிரன் மற்றும் புதன் சஞ்சாரம் செய்யும் நிலையில், வரும் பிப்ரவரி 13ஆம் தேதி கும்பத்தில் சூரியனும் இணைகிறார். சூரியனின் இந்த பெயர்ச்சியானது சுக்ராதித்ய ராஜயோகத்தை உருவாக்குகிறது. கும்பத்தில் ராகு, சுக்கிரன், புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகத்தால் இந்த 5 ராசிகளுக்கு எதிர்பாராத பண வரவு, அதிர்ஷ்டம், ஜாக்பாட் அடிக்க போகிறது. அதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

26
மிதுனம்: கும்பத்தில் நிகழும் கிரக சேர்க்கையால் விடியப்போகும் புதிய வாழ்க்கை

கும்ப ராசியில் இணையும் இந்த கிரகங்களின் சேர்க்கையால், மிதுன ராசியினருக்கு வாழ்க்கை தலைகீழாக மாறப் போகிறது. இதுவரையில் உங்களை வாட்டி வதைத்த பிரச்சனைகள் எல்லாம் முடிவுக்கு வர போகிறது. இனிமேல் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும் மாறும் காலம் தான். வாழ்க்கையில் பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். உங்களது வேலை பாதியாக குறையும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.

36
கடகம்: தொட்டதெல்லாம் துலங்கும் காலம்

கும்ப ராசியில் நிகழும் இந்த கிரகங்களின் சேர்க்கையானது கடக ராசிக்கு குறைய குறைய அள்ளி அள்ளி கொடுக்கப் போகிறது. தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவான பாதை பிறக்கும். நீண்ட நாள் கனவாக இருந்த "நினைத்த வேலை தேடி வரும். பொருளாதார நிலை உச்சத்தை எட்டும். இதன் காரணமாக ஆடம்பர வாழ்க்கை கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

46
கன்னி: அதிர்ஷ்டக் கதவுகள் திறக்கின்றன!

கும்பத்தில் நிகழும் ராகு, சுக்கிரன், புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் கன்னி ராசியினருக்கு வாழ்க்கைப் பாதையே மாறப் போகிரது. இனி நீங்கள் தொட்டது எல்லாம் பொன்னாகும். உங்களது நீண்ட நாள் கனவு நிறைவேறும். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் நிலவி வந்த கசப்புகள் நீங்கி, குதூகலம் பொங்கும். பொருளாதார ரீதியாக ஒரு பலமான முன்னேற்றத்தை இந்த பெயர்ச்சி பெற்றுத் தரும். காது குளிர நல்ல செய்திகள் வந்து சேரும்.

56
தனுசு: குபேர யோகம் ஆரம்பம்

கும்ப ராசியில் நிகழும் இந்த அபூர்வ 'திரிகிரகி யோகம்' தனுசு ராசிக்கு செல்வச் செழிப்பை அள்ளிக் கொடுக்கப் போகிறது. இதுவரையில் வாடகை வீட்டிலிருந்த நீங்கள் இனி சொந்தமாக வீடு வாங்கும் சூழல் உருவாகும். இல்லையென்றால் லீசுக்கு செல்வீர்கள். சொந்தமாக நிலம் வாங்கும் யோகம் தேடி வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு உயரும். எதிரிகளின் தொல்லை நீங்கும்.

66
மீனம்: அதிர்ஷ்ட லட்சுமி கதவைத் தட்டுகிறாள்

கும்பத்தில் நிகழும் இந்த கிரக சேர்க்கை மீன ராசிக்கு பொற்காலத்தை அள்ளித்தரப் போகிறது. நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்கும். உங்களது கடன் பிரச்சனைகள் முற்றிலுமாக நீங்கும். பண மழை பொழியப் போகிறது. அந்தளவிற்கு உங்களது வீட்டில் காசு, பணம் கொட்டும். அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட கடினமான வேலைகளைக் கூட மிக எளிதாக செய்து முடிப்பீர்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories