Published : Feb 03, 2025, 05:13 PM ISTUpdated : Feb 03, 2025, 05:16 PM IST
Sun Transit in Aquarius 2025 Palan in Tamil : மகரத்திலிருந்து கும்பத்திற்கு சூரியன் பெயர்ச்சி ஆகும் நிலையில் இந்த 4 ராசியினருக்கு பொற்காலமான மாதமாக இந்த பிப்ரவரி இருக்க போகிறது.
சூரியன் மகர ராசிக்கு பெயர்ச்சி: இந்த 3 ராசியினருக்கு 30 நாட்களுக்கு பொற்காலமான மாதம்!
Sun Transit in Aquarius 2025 Palan in Tamil : சூரிய பகவான் ஒவ்வொரு 30 நாட்களுக்கும் ஒரு முறை ராசியை மாற்றுவார். அதன்படி 2025 பிப்ரவரி 12ஆம் தேதி சூரிய பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த பெயர்ச்சி 4 ராசிகளுக்கு பொற்காலமாக அமைய போகிறது.
சூரிய ராசிபலன் பிப்ரவரி 2025: ஜோதிட சாஸ்திரத்தின் படி, சூரியன் ஒவ்வொரு 30 நாட்கள் மற்றும் சில மணி நேரங்களில் ராசியை மாற்றுகிறார். இவ்வாறு, இந்த கிரகம் 12 ராசிகளையும் 365 நாட்களில் சுற்றி வருகிறது. தற்போது சூரிய பகவான் மகர ராசியில் இருக்கிறார். வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி சூரியன் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சூரியன் ராசி மாறியவுடன் 4 ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கும், அவர்களுக்கு நிறைய பணவரவு கிடைக்கும். அந்த 4 ராசிகள் எவை என்று இங்கே தெரிந்து கொள்ளுங்கள்…
25
சூரிய மகர ராசி பெயர்ச்சி: ரிஷப ராசியினருக்கு வேலை கிடைக்கும்:
பிப்ரவரி 12 ஆம் தேதி சூரியன் மகர ராசிக்கு பெயர்ச்சியாவதால் ரிஷப ராசியினருக்கு ஏராளமான நல்ல பலன்கள் கிடைக்க போகிறது. இந்த ராசியில் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சமூகத்தில் செய்த நல்ல காரியங்களுக்காக அவர்களுக்கு மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண வரவுக்கான வாய்ப்புகளும் உள்ளன. வியாபாரம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர், வெளிநாடு சென்று வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும். செல்வ, செழிப்போடு சந்தோஷமாக வாழக் கூடிய தருணம் வந்துவிட்டது.
35
சூரியன் மகர ராசிக்கு பெயர்ச்சி – கன்னி ராசியினருக்கு பண வரவு உண்டாகும்:
சூரியன் மகர ராசிக்கு பெயர்ச்சியாவதால் கன்னி ராசியினருக்கு பண வரவுக்கான வாய்ப்புகள் உருவாகும். தொழிலில் பெரிய ஒப்பந்தம் கிடைக்கலாம். வேலையில் கொடுக்கப்பட்ட இலக்குகளை சரியான நேரத்தில் அடைவீர்கள். இதனால் சம்பள உயர்வு கிடைக்கும். அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பதவி கிடைக்கலாம். மாணவர்களுக்கும் நேரம் சாதகமாக இருக்கும். போட்டித் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
சூரியன் ராசி மாற்றம்: சிம்ம ராசியினருக்கு நல்ல செய்தி கிடைக்கும்
சூரியனின் ராசி மாற்றம் சிம்ம ராசியினருக்கு நல்ல செய்தியை கொண்டு வந்து சேர்க்க போகிறது. தொழில்-வேலை நிலைமை முன்னதை விட மிகவும் சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் முக்கியமான வேலைகள் முடிவடையும். அனுபவம் வாய்ந்தவர்களின் ஆதரவு கிடைக்கும், இதனால் இலக்குகளை சரியான நேரத்தில் அடைவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கடன் இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக நிவர்த்தியாகும். திரும்ப வர வேண்டிய பணம் வந்து சேரும்.
சூரியன் ராசி மாற்றம் - துலாம் ராசியினருக்கு ஆரோக்கியம் மேம்படும்
இந்த ராசியில் ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்படுபவர்களின் நிலைமை மேம்படும். அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவார்கள். நீதிமன்ற வழக்குகள் தீர்க்கப்படலாம். பூர்வீக சொத்தில் இருந்து லாபம் கிடைக்கும். குழந்தைகளுடன் தொடர்புடைய நல்ல செய்தி கிடைக்கும், இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கலாம்.