தமிழ்நாட்டின் சாஸ்திரங்களின்படி ஆடி மற்றும் ஆவணி (சிராவண) மாதங்கள் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில், 2026-ம் ஆண்டு இந்த புனிதமான காலத்தில் வானில் ஒரு மிகப்பெரிய கிரக சேர்க்கை நடக்கவிருக்கிறது. கிரகங்களின் ராஜாவான சூரியன், கிரகங்களின் தளபதியான செவ்வாய் மற்றும் புத்திக்கு காரகனான புதன் ஆகிய மூன்றும் ஒரே ராசியில் இணையப் போகின்றன. ஜோதிட சாஸ்திரத்தில் இந்த மூன்று கிரகங்களின் கூட்டணியை மிகவும் மங்களகரமானதாகக் கருதுகிறார்கள்.
இந்த மகா சேர்க்கையின் விளைவாக, 3 ராசிக்காரர்களின் வாழ்வில் ஒரு பொன்னான காலம் தொடங்கப் போகிறது. தொழில், வியாபாரம், நிதி நிலைமை என எல்லா வகையிலும் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாகத் தடைபட்டிருந்த வேலைகள் கூட இனி வெற்றிகரமாக முடியும். இந்த மாதத்தில் எந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது? என்பது குறித்து பார்ப்போம்.