ஆவணி மாத அதிர்ஷ்டம்! செல்வந்தராகும் 5 ராசிகள்.! உங்க ராசி உள்ளதா.?!

Published : Aug 16, 2025, 09:00 AM ISTUpdated : Aug 16, 2025, 10:46 AM IST

ஆகஸ்ட் 17, 2025 முதல் சூரியன் சிம்ம ராசியில் பிரவேசிப்பதால் மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம், மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம், நிதி வலுவடைதல், புதிய வாய்ப்புகள் போன்ற நன்மைகள் கிடைக்கும்.

PREV
16
செல்வம், மகிழ்ச்சி, நிம்மதி, சந்தோஷம்

ஆவணி மாதம் (ஆகஸ்ட் 17, 2025) முதல் சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்மத்தில் பிரவேசிக்கிறார். ஜோதிட ரீதியில் இது ஒரு மிகப் பெரிய மாற்றமாக கருதப்படுகிறது. சூரியன் தனது சொந்த வீட்டில் அமர்வதால், சில ராசிக்காரர்கள் எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். குறிப்பாக, மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ஐந்து ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் செல்வம், அதிர்ஷ்டம், மகிழ்ச்சி நிறைந்த மாதமாக இருக்கும்.

26
மிதுன ராசி Gemini

மிதுன ராசிக்காரர்களுக்கு தொழிலில் புதிய முன்னேற்றங்கள் தெரியும். பேசும் திறனும் அறிவாற்றலும் உச்சத்தில் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்டநாள் கடன் சுமைகள் குறையும். குடும்பத்திலும் மகிழ்ச்சியான தருணங்கள் அதிகரிக்கும்.

36
சிம்ம ராசி Leo

சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் சொந்த வீட்டில் அமர்வு பெரிய நன்மையை தருகிறது. நிதி நிலை வலுப்பெறும். புதிய முதலீடுகள், புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் வரும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் நல்ல உறவு உருவாகும். காதல் வாழ்க்கை திருமண யோகம் வரை செல்லும் வாய்ப்பு உள்ளது.

46
துலாம் ராசி Libra

துலாம் ராசிக்காரர்களுக்கு இது வருமானம் அதிகரிக்கும் மாதமாக அமையும். உயர் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். அரசியல், சமூக சேவையில் இருப்பவர்களுக்கு பெரும் வாய்ப்புகள் வரும். சிறு தொழில் செய்பவர்கள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பு காணப்படும். குடும்பத்திலும், வேலைகளிலும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

56
தனுசு ராசி Sagittarius

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த காலமாக இருக்கும். தொழிலில் வெற்றிகள், கல்வியில் முன்னேற்றங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு வெளிநாட்டு படிப்பு வாய்ப்பு உருவாகும். சாகச பயணங்கள், புதிய அனுபவங்கள் காத்திருக்கின்றன. வாழ்க்கை இலக்குகளை அடைய வழிகள் திறக்கும்.

66
கும்ப ராசி Aquarius

கும்ப ராசிக்காரர்களுக்கு தொழிலில் வளர்ச்சி, நிதியில் முன்னேற்றம் கிடைக்கும். குடும்பத்துடன் இணைந்து செய்யும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். விவசாயம் மற்றும் சிறுதொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத ஆதாயங்கள் வரும். ஆனால் வீட்டில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

Read more Photos on
click me!

Recommended Stories