ஜோதிடத்தில் சுக்கிரன் செல்வம், காதல், கலை, சுகபோகம் மற்றும் வசதியின் காரணியாக கருதப்படுகிறார். சுக்கிரன் நட்சத்திரம் மாறும்போது அதன் விளைவு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் எதிரொலிக்கும். பிப்ரவரி 11, 2026 காலை 8:56 மணிக்கு சுக்கிரன் சதய நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.
சதய நட்சத்திரம் கும்ப ராசியில் அமைந்திருப்பதாலும், இதன் அதிபதி ராகு என்பதாலும் சுக்கிரனின் இடமாற்றம் சில ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களையும், பொருளாதார முன்னேற்றத்தையும் தரவுள்ளது. அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.