இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.! இன்று இந்த 4 ராசிகள் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்.!

Published : Feb 17, 2026, 10:20 AM IST

Solar Eclipse 2026 : 2026 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் பிப்ரவரி 17 ஆம் தேதி நிகழ உள்ளது. இந்த கிரகணம் சனியின் ராசியான கும்ப ராசியில் நிகழ உள்ளதால், சில ராசிகளுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படும். அந்த ராசிகள் குறித்து காணலாம். 

PREV
15
Solar Eclipse 2026

2026 ஆம் ஆண்டில் இரண்டு சூரிய, இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழு இருக்கின்றன. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் பிப்ரவரி 17, 2026 அன்று நடக்க இருக்கிறது. இது வளைய சூரிய கிரகணம் என்னும் அரிய வானியல் நிகழ்வாகும்.

2026 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் பிப்ரவரி 17 அன்று மதியம் 3:26-க்கு தொடங்கி இரவு 7:57-க்கு முடிகிறது. இது இந்தியாவில் தெரியாது. எனவே கிரகணத்தின் தாக்கம் இந்தியாவில் செல்லுபடியாகாது. இருப்பினும் ஜோதிடத்தின்படி, சில ராசிகளுக்கு இதன் தாக்கம் தீவிரமாக இருக்கும். அந்த ராசிகள் பற்றி இங்கு காணலாம்.

25
கடகம்

கடக ராசிக்கு 8-ம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் கிரகணம் நடப்பதால், திடீர் செலவுகள் மற்றும் பயணங்களில் தடைகள் வரலாம். வாகனங்களை ஓட்டும்போது எச்சரிக்கை தேவை. தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும். இல்லையெனில் நிரந்த பிரிவுக்கு வழிவகுக்கலாம்.

35
சிம்மம்

சூரியன் உங்கள் ராசியின் அதிபதியாவார். மேலும் சூரிய கிரகணம் உங்கள் ராசியின் 7வது வீட்டில் நடக்க உள்ளது. உறவுகளில் பதற்றம் ஏற்படலாம். கணவன் மனைவி உறவுகளில் சிக்கல். ஏற்படலாம். கூட்டாக தொழில் செய்து வருபவர்களுக்கு பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. எனவே பொறுமை அவசியம்.

45
விருச்சிகம்

விருச்சிக ராசியினர் இன்றைய தினம் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். கிரகணம் உங்கள் ராசியின் 4-வது வீட்டில் நடக்க உள்ளது. எனவே தாயின் உடல்நலனில் அதிக அக்கறை காட்ட வேண்டும். சொத்து தொடர்பான முக்கிய முடிவுகளில் அவசரப்பட வேண்டாம்.

55
கும்பம்

கிரகணம் உங்கள் ராசியிலேயே நிகழ்வதால், உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற மனக்குழப்பங்கள் மற்றும் எடுத்த காரியங்களில் தடைகள் ஏற்படலாம். அகங்காரம் கூடாது. எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்னர் அலசி ஆராய்ந்து அதன் பின்னர் எடுப்பது நல்லது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories