Six Planetary Alignment after 297 Years : ஜோதிட சாஸ்திரத்தின்படி, 297 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அரிய கிரக சேர்க்கை நிகழ்வு நிகழவிருக்கிறது. கடந்த 1728 ஆம் ஆண்டு இதேபோன்ற ஒரு கிரக நிலை ஏற்பட்டது. இந்த அரிய நிகழ்வில், ஆறு முக்கிய கிரகங்கள் (சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி) ஒரு குறிப்பிட்ட ராசியில் அல்லது நெருக்கமான நிலையில் ஒரே நேர்கோட்டில் வரவிருக்கின்றன. இந்த நிகழ்வு வானியல் மற்றும் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
நிகழ்வு எப்போது நடக்கிறது?
இந்த அரிய கிரக சேர்க்கை, 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. குறிப்பாக, ரக்ஷா பந்தன் பண்டிகை நாளன்று இந்த நிகழ்வு அமைவது கூடுதல் சிறப்பாகக் கூறப்படுகிறது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் பூமியில் பல தாக்கங்களை ஏற்படுத்தும் என ஜோதிட வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இந்த ஆண்டு சூரியன் கடக ராசியிலும், சந்திரன் மகர ராசியிலும், செவ்வாய் கன்னி ராசியிலும், புதன் கடக ராசியிலும், குரு மற்றும் சுக்கிரன் மிதுன ராசியிலும், ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் இருப்பார்கள். இதுபோன்ற சேர்க்கை 1728-ல் நிகழ்ந்தது. இதனால் சில ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கலாம்.