
Simma Rasi New Year Rasi Palan 2025 : இன்னும் ஒன்றரை மாதங்களில் 2024 ஆம் ஆண்டு முடிந்து 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்க போகிறது. 2025 புத்தாண்டில் குரு, சனி, ராகு மற்றும் கேது கிரகங்களின் பெயர்ச்சி நிகழ இருக்கிறது. இந்த கிரகங்களின் பெயர்ச்சி அடிப்படையில் சிம்ம ராசிக்கு 2025 புத்தாண்டு எந்த மாதிரியான பலன்களை கொடுக்க போகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
2025 புத்தாண்டு சிம்மம் ராசி கல்வி:
சிம்ம ராசியைப் பொறுத்த வரையில் 2025 புத்தாண்டு கல்வியில் கலவையான பலனைத் தரும். படிப்பிற்கு உடல் ஆரோக்கியமும் முக்கியம் அல்லவா. உடல் நலம் நன்றாக இருந்தால் தான் நன்றாக படிக்க முடியும். படிப்பிலும் ஆர்வம் காட்ட முடியும். கூடுமானவரை லீவு போடுவதை தவிர்க்க வேண்டும். கவனமாக படிப்பது நல்லது. குரு உங்களுக்கு சாதகமான நிலையில் இருப்பதால் அவரது அருளால் போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். புதன் பகவானும் உங்களுக்கு சாதகமான நிலையில் இருந்து கல்வியை மேம்படுத்த துணை நிற்பார்.
சிம்ம ராசி 2025 புத்தாண்டில் பொருளாதாரம்:
2025 புத்தாண்டைப் பொறுத்த வரையில் சிம்ம ராசிக்கு பொருளாதாரத்தில் ஏற்றம் இறக்கமான காலகட்டமாக இருக்கும். குருவின் பார்வையானது உங்களுக்கு லாபம் தரக்கூடிய வீட்டை பார்ப்பதால் வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். சேமிக்கும் பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். குரு உங்களுக்கு சாதகமாக இருந்தாலும், சனி, ராகு மற்றும் கேது உங்களுக்கு சாதகமற்ற நிலைக்கு செல்வதால் வருமானம் தடைபடும். பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்படும். நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
2025ல் சிம்ம ராசிக்கு வேலை:
அலுவலகத்தில் வேலையில் இருப்பவர்களுக்கு கலவையான பலன் கிடைக்க பெறும். தடை தாமதங்களை கடந்து வேலையில் வெற்றி கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். ஆனால், தடைகளை கடந்த பிறகு தான் வந்து சேரும். குருவின் அருள் உங்களுக்கு கிடைப்பதால் வேலையில் சிறப்பாக செயல்பட முடியும். உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். ஆதரவும் கிடைக்க பெறுவீர்கள். எனினும் ஏற்றம் இறக்கமான காலகட்டமாக இருக்கும்.
2025 புத்தாண்டு சிம்ம ராசிக்கு காதல்:
ஒரே அலுவலகம் அல்லது ஒரே இடத்தில் வேலை பார்ப்பவர்கள் காதலில் இருந்தால் அவர்களுக்கு ஏற்ற காலமாக இருக்கும். ஆனால் வெளியில் இருப்பவர்கள் காதல் வலையில் இருந்தால் அவர்கள் சராசரியான பலனைத் தான் பெறுவார்கள். காதல் உறவுகளுக்கு குரு சாதகமான பலனைத் தருவார். மேலும், உண்மையான காதலாக இருந்தால் குருவின் ஆசியும், அருளும் கிடைக்க பெறுவீர்கள். இதுவே திருமணத்தை மீறிய காதல் உறவாக இருந்தால் அது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். ரகசிய உறவு வெளிச்சத்திற்கு வந்து அவமானப்படும் சூழலை உருவாக்கும்.
2025 புத்தாண்டு சிம்ம ராசி வீடு, வண்டி, வாகனம் யோக பலன்:
குரு சாதகமான நிலையில் இருப்பதால் நிலம், சொத்து சுகம் சேர்க்கை உண்டு. கட்டிய வீடு வாங்கும் சூழல் உருவாகும். புதிதாக வீடு கட்டும் யோகமும் கூடி வரும். வண்டி, வாகனம் வாங்கும் யோகமும் தேடி வரும். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனம் கூட வாங்குவீர்கள். ஆனால், எதிலும் ரிஸ்க் எடுக்க கூடாது. எளிதில் முடியும் காரியங்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்ய கூடாது. தீவிரமாக ஆலோசனை மேற்கொண்ட பின்னரே நிலமோ, வாகனமோ வாங்கலாம்.
சிம்ம ராசிக்கான 2025 புத்தாண்டு பலன் குடும்பம்:
கும்பத்தைப் பொறுத்த வரையில் 2025 புத்தாண்டு சிம்ம ராசிக்கு கலவையான பலனைத் தரும். ராகு மற்றும் கேது பகவானின் தாக்கம் குடும்பத்தில் விரிசலை ஏற்படுத்தும். குடும்ப உறவுகளில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். செவ்வாய் கிரக பெயர்ச்சி சாதகமான பலனையும், சாதகமற்ற பலனையும் தரும். கணவன் மனைவி உறவாக இருந்தால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குடும்ப பெரியவர்களிடத்தில் ஆலோசனை மேற்கொள்வது அவசியம்.
2025 புத்தாண்டு சிம்ம ராசி உடல் ஆரோக்கியம்:
2025 புத்தாண்டைப் பொறுத்த வரையில் சிம்ம ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு தேவை. ஜனவரி முதல் மார்ச் வரையில் சனியின் பார்வை முதல் வீடு மீது விழுகிறது. இது உங்களுக்கு உடலில் அசதியை ஏற்படுத்தும். மார்ச் மாதத்திற்கு பிறகு சனியின் பெயர்ச்சி உங்களது 8ஆவது வீட்டிற்கு செல்கிறது. இது துக்கத்தை குறிக்கிறது. அதோடு கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடு, கண்டம், அவமானம், வழக்கு போன்றவை ஏற்படக் கூடும். வெளிநாட்டுக்கு செல்லும் நிலை வரும். அதாவது குடும்பத்தை விட்டு பிரியும் சூழல். கிட்டத்தட்ட ராமர் வனவாசம் சென்றது போன்ற ஒரு நிலை தான்.
எனினும் குருவின் தாக்கம் உங்களது லாப வீடு மீது விழுகிறது. ஆதலால் ஓரளவு பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்த வரையில் வயிறு தொடர்பான பிரச்சனை வரக் கூடும். கவனமாக இருப்பது நல்லது. உடல் பருமன் கொண்டவர்கள் உடற்பயிற்சி செய்வது நல்லது. நாள்தோறும் நடைபயிற்சி செய்து வரை உடல் ஆரோக்கியம் மேம்படும்.
சிம்ம ராசிக்கான 2025 புத்தாண்டு திருமண வாழ்க்கை பலன்:
திருமணத்திற்கு வரன் பார்ப்பவர்களுக்கு நல்ல காலம். மகன் அல்லது மகளுக்கு திருமணம் நடைபெறும். நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் செய்வதற்கு ஏற்ற காலம். காதல் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு நல்ல காலம் இது. கலப்பு திருமணம் கூட செய்து கொள்ளலாம். ஏற்கனவே திருமணமான தம்பதிகளுக்கு இடையில் பிரச்சனை வரலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
சிம்ம ராசி 2025 புத்தாண்டு தொழில் பலன்:
2025 புத்தாண்டைப் பொறுத்த வரையில் சிம்ம ராசிக்கு தொழில் வாழ்க்கையில் கலவையான பலன் தான் கிடைக்கும். மார்ச் மாதம் வரையில் சனி பகவான் 7ஆவது வீட்டில் இருப்பார். இது தொழில் வாழ்க்கையில் ஓரளவு சாதகமான பலனைத் தரும். மார்ச் மாதத்திற்கு பிறகு சனி பகவான் 8ஆவது வீட்டிற்கு செல்வார். இது சாதகமற்ற நிலை. தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. முதலீடும் கூடாது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எந்த நிலை இருக்கிறதோ அதே நிலையில் டிராவல் பண்ணுவது நல்லது. யாரையும் நம்ப கூடாது. கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
சிம்ம ராசிக்கான 2025 புத்தாண்டு பரிகாரங்கள்:
வியாழக்கிழமை தோறும் விநாயகர் கோயிலோ, சிவன் கோயிலோ, பெருமாள் கோயிலோ எந்த கோயிலாக இருந்தாலும் சரி பாதாம் தானம் செய்ய வேண்டும்.
நாள்தோறும் நெற்றியில் குங்குமம் வைக்க வேண்டும்.
ஒரு சதுர வடிவிலான வெள்ளித் துண்டை எப்போதும் உங்களுடன் இருப்பது போன்று வைத்துக் கொள்ள வேண்டும்.
புதிதாக வீடு கட்ட ஆசைப்படுவோ, வண்டி, வாகனம் வாங்க விரும்புவோர் செவ்வாய்க் கிழமைகளில் முருகப் பெருமானை வழிபட வேண்டும்.