இந்தப் பரிகாரங்களைச் செய்ய வேண்டும்:
1. ஒவ்வொரு அமாவாசையன்றும் குளத்தில் மீன்களுக்கு மாவு உருண்டைகளை போட வேண்டும்.
2. கருப்பு எருமை மாட்டுக்கு எண்ணெயில் பொரித்த கருப்பு கொண்டைக் கடலையை கொடுக்க வேண்டும்.
3. சனி பகவானை மகிழ்விக்க இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்:
ஓம் ஹ்ரீம் நீலாஞ்சன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்.
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்.
4. ஒவ்வொரு சனிக்கிழமையும் கருப்பு நிற நாய் மற்றும் கருப்பு நிற மாட்டுக்கு ரொட்டி மற்றும் வாழைப்பழம் கொடுக்க வேண்டும்.
5. சனி பகவானுக்கு எள் சேர்த்து செய்யப்பட்ட உணவுப் பொருட்களைப் படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.