தீபாவளி பண்டிகைக்குப் பிறகு அக்டோபர் 22, 2025 அன்று மாலை 6:55 மணிக்கு ‘சாலிசா ராஜயோகம்’ உருவாகிறது. அழகு, அன்பு, செல்வம், ஆடம்பரம் ஆகியவற்றின் காரகரான சுக்கிரன் கிரகமும், தைரியம், வீரம், ஆற்றல் ஆகியவற்றின் காரகரான செவ்வாய் கிரகமும் ஒன்றுக்கொன்று 40° கோணத்தில் நிலைபெறுகின்றன. தீபாவளி முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த அரிய நிகழ்வு நடக்க இருக்கிறது.
இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் நிதி நிலைமை மேம்பட்டு, வாழ்க்கையில் திருப்பங்கள் ஏற்பட உள்ளது. சாலிசா ராஜயோகத்தால் அதீத அதிர்ஷ்டமும், செல்வமும் பெற இருக்கும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.