மேஷ ராசியினருக்குச் சுக்கிரன் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கும், களத்திர ஸ்தானத்திற்கும் அதிபதியாவார். பொதுவாகவே சுறுசுறுப்புக்குக் காரகனான செவ்வாயின் ராசியான மேஷத்திற்கு, சுக்கிர ஹோரையானது அதிர்ஷ்டத்தின் கதவுகளைத் தட்டாமல் உடைத்துக் கொண்டு உள்ளே வரப்போகிறது. இவர்களின் ராசிக்குத் தன ஸ்தானாதிபதியான சுக்கிரன் பலம் பெறுவதால், இதுவரை இருந்த வந்த கடுமையான பண நெருக்கடிகள், தீராத கடன்கள் அனைத்தும் மாயமாய் மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு, பல லட்சங்களில் எதிர்பார்த்த லாபம் கோடிகளைத் தொடும்.
குறிப்பாக, ரியல் எஸ்டேட், வாகன சேர்க்கை, மற்றும் ஆடை, ஆபரணத் தொழிலில் இருப்பவர்களுக்குப் புதிய ஆர்டர்கள் குவிந்து, வங்கி கணக்கில் பணம் நிரம்பும். இந்த ராசிக்காரர்கள் சுக்கிர ஹோரையில் தங்களின் புதிய முதலீடுகளைத் தொடங்கினாலோ அல்லது நிலுவையில் உள்ள பணத்தைக் கேட்கச் சென்றாலோ, ஏமாற்றமே இல்லாமல் எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும்.