Shani Jayanti 2026: 13 வருடங்களுக்குப் பின் சனிக்கிழமை நாளில் வரும் சனி ஜெயந்தி.! சனியின் அருளைப் பெறும் 3 ராசிகள்.! ராஜயோகம் கிடைக்கும்.!

Published : May 16, 2026, 07:00 AM IST

Shani Jayanti 2026: 13 வருடங்களுக்குப் பிறகு சனிக்கிழமையில் சனி பகவானின் பிறந்த நாள் வருகிறது. இது மூன்று ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை வாரி வழங்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
Shani Jayanti 2026

நவகிரகங்களில் நீதிமானாக அறியப்படுபவர் சனி பகவான். இவர் ஒருவர் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை வழங்குவார். இவர் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை நாளில் பிறந்ததாக கூறப்படுகிறது. சனி பகவான் பிறந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மே 16ஆம் தேதி சனி ஜெயந்தி வருகிறது. சனி பகவானுக்கு உகந்த சனிக்கிழமையிலேயே இந்த நாள் வருவது மிகவும் சிறப்பானதாக அமைகிறது. சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு சனி ஜெயந்தி சனிக்கிழமையிம. வருவதால் மூன்று ராசிக்காரர்கள் சிறப்பான நன்மைகளைப் பெற உள்ளனர். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சனி ஜெயந்தியானது அற்புதமான பலன்களை வழங்க இருக்கிறது. இந்த ராசிக்காரர்கள் சனி பகவானின் ஆசியால் வாழ்க்கையில் புதிய உச்சங்களைப் பெறுவீர்கள். பல வழிகளில் இருந்து நன்மைகள் கிடைக்கும். நல்ல செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். நீண்ட காலமாக இருந்து வந்த மன அழுத்தங்கள் குறையும். நின்று போன காரியங்கள் மீண்டும் வேகம் எடுக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் காணப்படும். பணிபுரிபவர்கள் கடின உழைப்புக்கான பலன்களைப் பெறுவீர்கள். தன்னம்பிக்கை மற்றும் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும்.

35
மகரம்

மகர ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளில் சனி பகவானின் சிறப்பு அருளை பெற இருக்கிறீர்கள். இத்தனை நாட்களாக வறுமையில் வாடி வந்தவர்கள் இனி கோபுரத்திற்கு செல்ல இருக்கிறீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவுகள் நனவாகும். குடும்பத்தில் இருந்து தகராறுகள் அனைத்தும் முடிவுக்கு வந்து மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமையும். தொழிலில் எதிர்பாராத வகையில் முன்னேற்றம் காணப்படும். வேலையில்லாமல் இருந்து வரும் பட்டதாரிகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். சனி பகவானின் ராசி காரணமாக ஏழ்மை நீங்கி செல்வம் அதிகரிக்கும். நிதி நிலைமை மேம்படும்.

45
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு சனி ஜெயந்தியானது புதிய முன்னேற்றங்களையும், தொடக்கங்களையும் தர இருக்கிறது. சனி பகவானின் பரிபூரண ஆசை கிடைப்பதால் இலக்குகளை அடைந்து வெற்றிகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் இந்த காலத்தில் புதிய முதலீடுகளை தொடங்கி அதில் வெற்றிகளை குவிப்பீர்கள். வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கிடைக்கும். எதிர்காலத்திற்குத் தேவையான நிதி முதலீடுகளை தொடங்குவீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் வகையில் புதிய நண்பர்களை சந்திப்பீர்கள். அவர்கள் மூலம் நல்ல மாற்றங்கள் ஏற்படும். நிதி நிலைமை மேம்படும். வாழ்வில் நேர்மையான மாற்றங்களை காண்பீர்கள்.

55
பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

Read more Photos on
click me!

Recommended Stories