
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது. அந்தந்த பதவிகளை பொறுத்து குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல நிலைகளில் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் அரசு வேலையில் சேர்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி மூலம் அரசு பணியிடங்களின் நியமனம் வெளிப்படையாக நடந்து வருவதால் மாநிலம் முழுவதும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நம்பிக்கையுடன் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.
சிலர் மற்ற வேலைகளுக்கு செல்லாமல் முழு முயற்சியாக அரசு வேலைக்கு செல்ல படித்து வருகின்றனர். ஜோதிட சாஸ்திரம் மற்றும் எண் கணிதம் அடிப்படையில் அரசு வேலை பெறுவதற்கான வாய்ப்புகள் சில குறிப்பிட்ட எண்கள் மற்றும் ராசிகளுக்கு சாதகமாக இருப்பதாகக் கருதப்படுகிறது. அவை என்னென்ன எண்கள்? என்னென்ன ராசிகள்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
எண் 1 (சூரியன்): சூரியன் 'அரசாங்கத்தின் காரகன்' என்று அழைக்கப்படுகிறார். 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது விதி எண் (Destiny Number) 1 ஆக இருப்பவர்களுக்கு அரசுத் துறையில் உயர் பதவிகள் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது என்று நியூமரலாஜி கூறுகிறது.
எண் 3 (குரு): குரு பகவான் அறிவையும் நீதியையும் குறிப்பவர் ஆவார். 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் கல்வித் துறை, சட்டம் அல்லது வங்கித் துறையில் அரசு வேலை பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
எண் 9 (செவ்வாய்): செவ்வாய் தைரியத்தையும் நிர்வாகத்தையும் குறிப்பவர். 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ராணுவம், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை போன்ற சீருடைப் பணியில் அரசு வேலை பெற அதிக வாய்ப்புள்ளது.
ஜோதிட ரீதியாக, 2026-ம் ஆண்டின் கிரக நிலைகளின்படி சில ராசிகளுக்கு அரசு வேலைக்கான கதவுகள் திறக்கப்பட வாய்ப்புள்ளது
மேஷம்: செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட இவர்களுக்கு விடாமுயற்சியால் அரசு வேலை கிட்டும்.
சிம்மம்: சூரியனை அதிபதியாகக் கொண்ட ராசி என்பதால், அதிகாரமிக்க அரசு பதவிகள் தேடி வரும்.
விருச்சிகம்: போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று நிர்வாகத் துறையில் நுழைய வாய்ப்பு அதிகம்.
மகரம்: சனி பகவானின் ஆதிக்கம் இருப்பதால், கடின உழைப்பிற்குப் பிறகு நிலையான அரசு பணி கிடைக்கும்.
அரசு வேலை வேலை கிடைப்பதற்கு ஜாதகத்தில் சூரியன் பலம் இருக்க வேண்டும் என ஜோதிடசாஸ்திரம் சொல்கிறது. அதாவது ஜாதகத்தில் சூரியன் 1, 10 அல்லது 11-ம் இடங்களில் அமர்வது 'அரசு யோகத்தை' தரும். இதேபோல் தொழில் ஸ்தானமான 10-ம் இடத்தின் அதிபதி வலுவாக இருந்தால், கைநிறைய சம்பளத்துடன் அரசு பணி அமையும். மேலும் இப்போது நடக்கும் தசை அல்லது புக்தி சூரியன், குரு அல்லது செவ்வாயுடன் தொடர்புடையதாக இருந்தால் அரசு வேலைக்கு வாய்ப்புள்ளது என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.
பொறுப்பு துறப்பு: இந்த செய்தி கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், எண் கணிதம், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். அரசு வேலைக்காக தயராகுபவர்கள் கடினமாக உழைத்தால், விடா முயற்சியுடன் படித்தால் உங்களுக்கான பலன் கிடைக்கும்.