செப்டம்பரில் 4 ராசிகளுக்கு 3 மடங்கு லாபம்; யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் தெரியுமா?

Published : Aug 18, 2025, 09:59 PM IST

September Triple Benefit for 4 Zodiac Signs : செப்டம்பர் மாதத்தில், செவ்வாய் கிரகம் தனது பாதையை மூன்று முறை மாற்றுகிறது. இதனால் சில ராசிக்காரர்கள் ஏராளமான பலன்களைப் பெறுவார்கள்.

PREV
14
மேஷ ராசிக்கான செப்டம்பர் மாத ராசி பலன்கள்:

September Triple Benefit for 4 Zodiac Signs : மேஷ ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் சிறப்பானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில், அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நன்மையும் அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வரன் தேடி வரும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். குடும்பத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர், வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய ஊயர்வு கிடைக்கப் பெறுவீர்கள்.

24
விருச்சிக ராசிக்கான செப்டம்பர் மாத ராசி பலன்கள்:

விருச்சிக ராசிக்காரர்கள் இந்த மாதம் வாகனங்கள் மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்யலாம். இந்த நேரத்தில், விருச்சிக ராசிக்காரர்களுக்கு பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த மாதம் தொழில் செய்பவர்களுக்கு நன்மை பயக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். புதிய வேலை கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கப் பெறலாம். ஏராளமான நன்மைகள் நிறைந்த நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

34
ரிஷப ராசிக்கான செப்டம்பர் மாத ராசி பலன்கள்:

ரிஷப ராசிக்காரர்கள் இந்த மாதம் ஆடம்பர பொருட்களை வாங்கலாம். தொழில் அடிப்படையில் சிறப்பாக இருக்கும். எலக்ட்ரானிக் பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். உங்களது புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும்.

44
கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பலனளிக்கும். அவர்களின் வருமானம் அதிகரிக்கலாம். வேலையில் இருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. ஒரு சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கப் பெறும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories