செப்டம்பர் மாதத்தில் நான்கு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடக்கவுள்ளது. இதனால் சில ராசிகளின் வாழ்க்கையில் மாற்றங்கள் நடக்கவுள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வேத ஜோதிடத்தின்படி ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. கிரகங்களின் இந்த மாற்றத்தால் சுப அல்லது அசுப பலன்கள் உண்டாகின்றன. அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் நான்கு முக்கிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றுகின்றன. அந்த கிரக பெயர்ச்சிகள் என்ன? அதனால் பலன்பெறும் ராசிகள் யார் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
செப்டம்பர் 13 - கிரகங்களின் தளபதியான செவ்வாய் துலாம் ராசிக்கும்,
செப்டம்பர் 15 - அசுரர்களின் குருவான சுக்கிரன் சிம்ம ராசிக்கும்,
செப்டம்பர் 15 - கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் கன்னி ராசிக்கும்,
செப்டம்பர் 17 - கிரகங்களின் ராஜாவான சூரியன் கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.
24
ரிஷபம்:
செப்டம்பர் மாதம் ரிஷப ராசிக்கு நல்ல பலன்களைத் தரவுள்ளது. கிரகங்களின் பெயர்ச்சியும், அதனால் உருவாகும் சுப யோகங்களும் வாழ்க்கையில் புதிய அதிர்ஷ்டங்களை கொண்டு வரவுள்ளது. நிலுவையில் இருந்த அல்லது இதுவரை கிடப்பில் கிடந்த அனைத்து வேலைகளும் நிறைவடையும். தொழில் ரீதியாகவும் இந்த மாதம் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நிதி நிலைமை சீராக இருக்கும்.
34
தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் செப்டம்பர் மாத கிரக நிலைகளால் எதிர்பாராத பணி ஆதாயங்களைப் பெற உள்ளனர். மன அழுத்தம் குறையும். வியாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். இந்த மாதம் இடம் மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. படிப்பில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவர். மாணவர்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திருமணமாகதவர்களுக்கு திருமண யோகம் கூடி வரும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். இந்த மாதத்தில் பணத்தை நிறைய சேமிக்க முடியும்.
செப்டம்பர் 17 ஆம் தேதி புதன் மற்றும் சூரியன் கன்னி ராசியில் இணைவதால் புதாத்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் கன்னி ராசிக்கு இந்த மாதம் பல நன்மைகள் கிடைக்கவுள்ளன. கன்னி ராசிக்காரர்கள் பண மழையில் நனைய உள்ளனர். இந்த மாதம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். வேறு பணி தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் கூடிய பணி கிடைக்கும்.