எப்போதும் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் விருச்சிக ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் பண வளமும் சுக வாழ்வும் ஒன்றாக வந்து சேரும் சிறப்பான காலமாக அமையும். குறிப்பாக சனி மற்றும் குரு உங்கள் பக்கம் நன்மை தரும் வகையில் சஞ்சரிப்பதால், நிதி முன்னேற்றம் ஏற்படும். காசு மேல காசு வரும் எனும் சொற்றொடரைப்போல எதிர்பாராத வருமானம் கைக்கு வரும். சம்பளம், வியாபார லாபம் அல்லது முதலீட்டில் இருந்து கிடைக்கும் நன்மை மூலம் பணவசதி அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. குறிப்பாக கார் வாங்கும் எண்ணம் இருந்தவர்கள் இந்த வாரத்தில் அதனை நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது.
வேலைப் பகுதியில் உங்களின் முயற்சிகள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறும். புதிய திட்டங்களை முன்னெடுத்து சாதனை படைப்பீர்கள். சிலருக்கு வெளிநாட்டு பயணம் தொடர்பான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் பழைய வாடிக்கையாளர்களுடன் மீண்டும் உறவு ஏற்படுத்திக் கொள்ளலாம் அதேசமயம் புதிய வணிக ஒப்பந்தங்களும் கைகூடும்.