Astrology: வானில் தோன்றும் அரிய 'ஸ்கார்பியோ ப்ளூ மூன்'.. அசுர வளர்ச்சியும் அதிர்ஷ்டமும் பெறப்போகும் 4 அதிர்ஷ்டசாலி ராசிகள்!

Published : May 30, 2026, 05:10 PM IST

Blue Moon 2026: மே 31 அன்று நிகழவிருக்கும் அரிய 'ஸ்கார்பியோ ப்ளூ மூன்' பௌர்ணமியால், மேஷம் உள்ளிட்ட நான்கு ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இந்த வானியல் மற்றும் ஆன்மீக நிகழ்வு போன்ற பல நேர்மறையான மாற்றங்கள் நடக்கப்போகிறது.

PREV
15
ப்ளூ மூன்

2026 மே 31 அன்று, ஜேஷ்ட மாதத்தின் அதிகமாச பௌர்ணமி வானில் நிகழவிருக்கிறது. இந்த பௌர்ணமி தினத்தில் சந்திரன் நீல நிறத்தில் காட்சியளிக்கும் என்பதால், இது ஜோதிடத்திலும் விண்வெளி அறிவியலிலும் 'ப்ளூ மூன்' (Blue Moon) என்று அழைக்கப்படுகிறது. விண்வெளி அறிவியல் விதிகளின்படி, ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் வந்தால், அதில் வரும் இரண்டாவது பௌர்ணமியே ப்ளூ மூன் ஆகும். இந்த முறை, சந்திரன் 'ஸ்கார்பியோ' எனப்படும் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் போது இந்த பௌர்ணமி நிகழ்வதால், இது 'ஸ்கார்பியோ ப்ளூ மூன்' என்று ஜோதிடர்களால் வர்ணிக்கப்படுகிறது. இந்த அரிய ஆன்மீக மற்றும் வானியல் நிகழ்வின் காரணமாக, 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.

25
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ப்ளூ மூன் பௌர்ணமி அசுர வளர்ச்சியைத் தரப்போகிறது. நீண்ட நாட்களாக வராமல் முடங்கிக் கிடந்த பணம் கைக்கு வந்து சேரும். உங்களின் பொருளாதார நிலை முன்பை விட பலமடங்கு உயரும். நீண்ட நாள் சட்டப் போராட்டங்கள் அல்லது நீதிமன்ற வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடியும். நலம் விரும்பிகளின் ஆதரவு கூடும். உடன்பிறந்தவர்களுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

35
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களின் வாழ்வில் இருந்த வந்த நிம்மதியற்ற சூழல் மாறி, மகிழ்ச்சி குடியேறும். நண்பர்களின் முழு ஒத்துழைப்போடு புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு அமையும். வாகனம் அல்லது புதிய சொத்து வாங்க வேண்டும் என்ற உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பொறுப்புகளும், எதிர்பார்த்த பதவி உயர்வும் (Promotion) கிடைக்கும். தகுந்த வரன் தேடுபவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். ஆன்மீகப் பயணங்கள் செல்ல நேரிடலாம்.

45
மகரம்

மகர ராசிக்காரர்களின் வாழ்வில் பல நேர்மறையான மாற்றங்கள் அரங்கேறும். நீங்கள் நீண்ட நாட்களாகத் திட்டமிட்டுத் தள்ளிப்போன காரியங்கள் அனைத்தும் இப்போது சரியான நேரத்தில் எவ்விதத் தடையுமின்றி முடியும். புதிய தொழில் தொடங்க இதுவே மிகச் சிறந்த தருணம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் சற்றுக் கடினமாக உழைத்தால் நினைத்ததை விடப் பெரிய வெற்றியைப் பெறலாம். நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்த உடல்நலக் குறைபாடுகள் நீங்கி, ஆரோக்கியம் வெகுவாக மேம்படும்.

55
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த ப்ளூ மூன் காலம் எல்லாவற்றிலும் சாதகமான பலன்களையே அள்ளித் தரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடந்து, உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி பொங்கும். மாமியார் வீட்டுத் தரப்பிலிருந்து எதிர்பாராத சொத்து சேர்க்கையோ அல்லது விலையுயர்ந்த பரிசுகளோ கிடைக்க வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவோடு மிக முக்கியமான புராஜெக்ட்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் மட்டும் புதிய முதலீடுகள் செய்யும்போது சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உங்கள் பிள்ளைகளின் கல்வி அல்லது வேலைவாய்ப்பில் ஒரு பெரிய அங்கீகாரமும் சாதனையும் கிடைத்து, உங்களுக்குப் பெருமை சேர்ப்பார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories