மீனத்தில் வக்ரமாகும் சனி பகவான்: 138 நாட்கள் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.! கஷ்டங்கள் எல்லாம் தீரப்போகுது.!

Published : Jan 09, 2026, 02:10 PM IST

Sani Vakra Peyarchi 2026 Tamil: நீதி தேவன் என்று அழைக்கப்படும் சனி பகவான் 2026 ஆம் ஆண்டில் வக்ர பெயர்ச்சி அடைய உள்ளார். இதனால் 5 ராசிக்காரர்களுக்கு பொற்காலம் வரப்போகிறது. 

PREV
16
Sani Vakra Peyarchi 2026 Tamil

ஜோதிட சாஸ்திரப்படி, சனி மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம். தற்போது சனி மீன ராசியில் சஞ்சரிக்கிறார். ஜூலை 27, 2026-க்கு பிறகு சனி மீண்டும் வக்ர பெயர்ச்சியைத் தொடங்க உள்ளார். இதனால் 5 ராசிகளின் அதிர்ஷ்டம் இரட்டிப்பாக உள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

26
1.ரிஷபம்

2026-ல் சனியின் வக்ர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை இல்லாத லாபம் ஈட்டுவீர்கள். உங்களை நீண்ட காலமாக தொந்தரவு செய்து வரும் பிரச்சனைகளில் இருந்து முழுமையாக விடுபடுவீர்கள்.

36
2.கன்னி

சனியின் வக்ர பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கும். வருமானத்தை பெருக்க புதிய வழிகள் பிறக்கும். தடைபட்டிருந்த அனைத்து வேலைகளையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். சனி பகவானின் அருளால் எடுக்கும் அனைத்து காரியங்களிலும் சிறப்பான வெற்றிகளைப் பெற முடியும். சிறிய கடின உழைப்பும், பெரிய பலன்களைத் தரும்.

46
3.துலாம்

சனியில் சஞ்சாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு ஆறு மாதங்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தரும். கை நிறைய சம்பாதிப்பீர்கள். நிதி நிலைமை வலுப்படும். சொத்தை விற்பது அல்லது வாங்கும் முயற்சிகள் கைகூடும். சனியின் அருளால் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சேமிப்பு எதிர்பாராத வகையில் அதிகரிக்கும்.

56
4.மகரம்

2026-ல் சனியின் வக்ர பெயர்ச்சி உங்களுக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முதலீடுகள் மற்றும் பங்கு சந்தை மூலமாக மகத்தான நன்மைகள் உண்டாகும். அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். மேல் அதிகாரிகள் உங்கள் பணியை பாராட்டுவார்கள்.

66
5.கும்பம்

2026 ஜூலையில் சனி வக்ர பெயர்ச்சியைத் தொடங்கும் போது, அதிர்ஷ்டம் பெருகும். செல்வத்தை பெருக்க புதிய வழிகள் பிறக்கும். உடல் மற்றும் மனப் பிரச்சனைகளிலிருந்தும் விடுபடுவீர்கள். கும்ப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் செல்வத்தையும், செழிப்பையும் அனுபவிப்பீர்கள். வருமானத்தை பெருக்குவதற்கான புதிய பாதைகளை கண்டுபிடிப்பீர்கள். உடல் மற்றும் மனப் பிரச்சனைகளில் இருந்து முழுமையான விடுதலைப் பெறுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories