சனி வக்ர பெயர்ச்சி 2026: அடிமேல் அடி வாங்கப்போகும் 3 ராசிகள்.. தப்பிக்க எளிய பரிகாரங்கள் இதோ!

Published : Jul 26, 2026, 03:45 PM IST

Saturn Retrograde 2026: சனிபகவான் மீன ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் 3 ராசிகளுக்கு சோதனைக் காலம் தொடங்க போகிறது. அவை எந்தெந்த ராசிகள்? தப்பிக்க எளிய பரிகாரங்கள் என்னென்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

PREV
14
சனி வக்ர பெயர்ச்சி 2026 - Saturn Retrograde 2026

ஜோதிட சாஸ்திரத்தில் 'கர்ம காரகன்' என்று போற்றப்படும் சனிபகவான், ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்கும் நீதி தேவனாக விளங்குகிறார். ஒழுக்கம், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கும் சனிபகவான் வக்ர நிலை அடையும் போது (பின்னோக்கி நகர்வது போல் தோன்றும் காலம்), அதன் தாக்கம் மிகவும் தீவிரமாக இருக்கும்.

வரும் 2026 ஜூலை 29 அன்று சனிபகவான் மீன ராசியில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். இந்த காலகட்டம் நாம் செய்த பழைய தவறுகளைத் திருத்திக் கொள்ளவும், நிலுவையில் உள்ள கடமைகளை முடித்து ஆரோக்கியம் மற்றும் குடும்பத்தின் மீது கவனம் செலுத்தவும் கிடைத்த வாய்ப்பாகும். சனி யாரையும் தேவையின்றி தண்டிப்பதில்லை; மாறாக, நம் வாழ்க்கையில் எங்கு சீர்திருத்தம் தேவை என்பதை உணர்த்துகிறார்.

இந்த ஜூலை மாத இறுதியில் நிகழும் சனி வக்ர சஞ்சாரத்தால் சவால்களைச் சந்திக்கக்கூடும் ராசிகள் மற்றும் அவற்றுக்கான எளிமையான பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

24
1. மேஷம்

மேஷ ராசியினருக்கு தற்போது ஏழரைச் சனியின் தொடக்கக் கட்டம் (விரயச் சனி) நடக்கிறது. சனி வக்ரமடையும் இந்த நேரத்தில் தேவையற்ற மன அழுத்தம், தூக்கமின்மை, அதிகப்படியான செலவுகள் மற்றும் உணர்ச்சிப் போராட்டங்கள் ஏற்படக்கூடும். அவசரப்பட்டு தொழிலில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் மனக் குமுறல்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும்போது கவனமாக இருங்கள். நெருங்கியவர்களே உங்களுக்கு எதிராக மாற வாய்ப்புள்ளது.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் அல்லது துளசி மாலை சாற்றி வழிபடவும். 'அனுமன் சாலீசா' பாராயணம் செய்வது மன அழுத்தத்தைக் குறைத்து தைரியத்தைத் த

34
2. கும்பம்

கும்ப ராசியினருக்கு ஏழரைச் சனியின் இறுதி கட்டம் (குடும்பச் சனி) நடைபெறுகிறது. இந்த வக்ர பெயர்ச்சியால் நிதிநிலை, குடும்ப அமைதி, பேச்சு மற்றும் சுயமரியாதையில் சில சோதனைகள் வரலாம். வார்த்தைகளில் நிதானம் தேவை. பழைய குடும்பப் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கி மன அமைதியைக் குலைக்கலாம். வியாபாரத்தில் எதிர்பாராத தடைகள் வரக்கூடும் என்பதால், புதிய முதலீடுகளைத் தவிர்த்து, செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஏழை எளியவர்களுக்கோ அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கோ எள் கலந்த உணவு அல்லது கருப்பு நிற ஆடைகளை தானமாக வழங்கவும்.

44
3. மீனம்

மீன ராசியினருக்கு ஏழரைச் சனியின் உச்சக்கட்டமான ஜென்மச் சனி நடைபெறுகிறது. சனி உங்கள் ராசியிலேயே வக்ரமடைவதால் தன்னம்பிக்கை குறைதல், உடல்நலக் கோளாறுகள் மற்றும் அடையாளப் போராட்டங்கள் ஏற்படலாம். சிறிய தவறுகள் கூட பெரிய இழப்பை ஏற்படுத்தலாம். கணவன்-மனைவி இடையே திறந்த மனதுடன் பேசுவது கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கும். ஆரோக்கியத்தில் சிறு மாற்றம் தெரிந்தாலும் அலட்சியம் காட்ட வேண்டாம்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும். தினமும் 'ஸ்ரீ ருத்ரம்' கேட்பது அல்லது "ஓம் ஷம் சனைச்சராய நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிப்பது நன்மைகளைத் தரும்.

குறிப்பு: சனி வக்ர காலம் என்பது பயப்படுவதற்கான நேரம் அல்ல; சுய பரிசோதனை செய்து நம்மை நாமே செம்மைப்படுத்திக் கொள்வதற்கான காலம். ஆகவே இந்த ராசிக்காரர்கள் பயப்பட வேண்டாம்.

Read more Photos on
click me!

Recommended Stories