Astrology: ஒரே நேரத்தில் ராகு, கேது, சனி பெயர்ச்சி.! இந்த 5 ராசிகள் வாழ்க்கையில் இனி பிளாஸ்ட்டு பிளாஸ்ட்டு தான்.!

Published : May 19, 2026, 07:00 AM IST

Saturn Rahu Ketu Transit 2026: சனி, ராகு, கேது ஆகிய 3 முக்கிய கிரகங்களும் தங்களின் சொந்த நட்சத்திரங்களுக்குள் நுழைகின்றன. இதனால் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகிறது. அந்த ராசிகள் குறித்து பார்க்கலாம்.

PREV
16
Saturn Rahu Ketu Transit 2026

ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனி, ராகு, கேது ஆகிய மூன்று கிரகங்களும் ஒரு அரிய பெயர்ச்சிக்கு தயாராகி வருகின்றன. தற்போது, ராகு தனது சொந்த நட்சத்திரமான சதயத்திலும், சனி தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதியிலும் இருக்கிறார்கள். கேதுவும் தனது சொந்த நட்சத்திரமான மகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கி இருக்கிறார். இப்படி மூன்று முக்கிய கிரகங்கள் தத்தமது சொந்த நட்சத்திரங்களில் இருப்பது, ஐந்து ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகிறது. அந்த ராசிகள் எவை, அவங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என விரிவாகப் பார்க்கலாம்.

Guru Peyarchi: பூச நட்சத்திரத்திற்கு மாறும் குரு பகவான்.! அடுத்த 60 நாட்கள் குபேர யோகம் பெற்று கோடீஸ்வரராகப் போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்.!

26
மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு, செய்கிற வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு லாபம் வரும். இந்த நேரத்தில் செய்யும் முதலீடுகள் நல்ல பலனைக் கொடுக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து லாபம் பார்ப்பீர்கள். சமூகத்தில் செல்வாக்கு உள்ளவர்களுடன் பழக்கம் ஏற்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் சரியான நேரத்தில் முடிவடையும்.

Raja Yoga: 6 சுப கிரகங்களின் அரிய சேர்க்கை.! அடுத்த 6 மாதங்களுக்கு உச்சத்திற்கு செல்லப் போகும் 6 ராசிகள்.!

36
சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு நிதி நிலைமை சாதகமாக இருக்கும். பழைய முதலீடுகளில் இருந்து லாபம் வர வாய்ப்புள்ளது. வேலையில் பதவி உயர்வு அல்லது நல்ல வளர்ச்சி தெரியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அதிர்ஷ்டம் கைகொடுப்பதால், பல வேலைகள் சுலபமாக முடியும். பழைய வாகனங்களை மாற்றிவிட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். தொழில் வளர்ச்சிக்குத் தேவையான புதிய முதலீடுகளைத் தொடங்குவீர்கள்.

Gajakesari Yoga 2026: நேரடியாக விழும் குரு பார்வை.! கஜகேசரி ராஜயோகத்தால் 4 ராசிகளுக்கு இனி ஏறுமுகம் தான்.!

46
கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு பொருளாதாரம் மற்றும் தொழில் ரீதியாக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் நடக்கும் பேச்சுவார்த்தைகள் மற்றும் புதிய தொடர்புகள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் குடும்ப வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். சொத்து விற்பனை அல்லது வாங்குவதன் மூலம் லாபம் பெற வாய்ப்புள்ளது. மூதாதையர் சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது. வீட்டில் பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை நடைபெறும்.

56
தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு சனி, ராகு, கேதுவின் இந்த மாற்றம் சுபமான பலன்களைத் தரும். தொழிலில் இதுவரை பார்த்திராத லாபத்தைக் காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். எடுக்கும் வேலைகள் வெற்றியில் முடியும். சிறிய முயற்சியில் பெரிய பலனைப் பெறுவீர்கள். தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கத் தொடங்கும். ஆன்மீக காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனரீதியாக நிம்மதியாக உணர்வீர்கள். வீட்டிலும் வெளியிலும் அமைதியான சூழல் நிலவும்.

66
மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் நிலுவையில் உள்ள வேலைகள் வேகமாக முடியும். உங்கள் தொழில் அல்லது வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் வரலாம். வருமானம் சீராக உயர்ந்து, செலவுகள் குறையும். நிதி நிலைமை மேம்படும். ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். மூதாதையர் அல்லது பரம்பரை சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் விலகும். எதிர்பாராத வழிகளில் இருந்து பணம் குவியத் தொடங்கும். உபரி வருமானத்திற்கான வழிகள் பிறக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories