சனி நட்சத்திர பெயர்ச்சி – இந்த 3 ராசிகளுக்கு வாழ்க்கையை மாற்ற போகும் சனி பகவான்!

Published : Apr 28, 2025, 05:28 PM IST

Saturn Nakshatra Transit 2025 Palan : பூர்வபாத்ரபாத நட்சத்திரத்திலிருந்து வெளியேறி உத்தர பாத்ரபாத நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகும் சனி பகவான் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலனை கொடுக்கிறார். அந்த 3 ராசிகள் யார் யார் என்று இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

PREV
16
சனி நட்சத்திர பெயர்ச்சி – இந்த 3 ராசிகளுக்கு வாழ்க்கையை மாற்ற போகும் சனி பகவான்!

Saturn Nakshatra Transit 2025 Palan : சனி பகவான் ஒவ்வொரு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றி 12 ராசிகளுக்கும் தான் இருக்கும் மற்றும் பார்க்கும் இடங்களுக்கு ஏற்ப பலன்களை கொடுப்பார். அதே போன்று வருடத்திற்கு ஒரு முறை சனி பகவான் தனது நட்சத்திரத்தையும் மாற்றுகிறார். அந்த வகையில் ஏற்கனவே திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பகவான் மார்ச் 29ஆம் தேதி கும்ப ராசியிலிருந்து குருவின் ராசியான மீன ராசிக்கு பெயர்ச்சியானார். இதையடுத்து இப்போது நட்சத்திர மாற்றம் நிகழ்கிறது. வேத ஜோதிடத்தின்படி சனி பகவான் பூர்வபாத்ரபாத நட்சத்திரத்திலிருந்து வெளியேறி உத்தரபாத்ரபாத நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

26

தற்போது மீன ராசியிலும், பூர்வ பாத்ரபாத நட்சத்திரத்திலும் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். இந்த நிலையில் தான் ஏப்ரல் 30ஆம் தேதி அட்சய திரிதியை 2025 வரும் நிலையில், அதற்கு முன்னதாக ஏப்ரல் 28, 2025 அன்று, சனி தனது சொந்த நட்சத்திரமான உத்தரபாத்ரபாத நட்சத்திரத்தில் நுழைகிறார். அப்படி நுழையும் சனி பகவான் வரும் அக்டோபர் 3ஆம் தேதி வரையில் அதே உத்தர பாத்ரபாத நட்சத்திரத்திலேயே இருப்பார். இந்த நட்சத்திரத்தில் இருக்கும் போது சனி பகவான் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுப்பார். சனி பகவானால் அதிர்ஷ்ட பலனை அனுபவிக்கும் ராசிகளில் ரிஷபம், மிதுனம் மற்றும் கும்பம் ஆகிய ராசிகள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.

36

சனி நட்சத்திர பெயர்ச்சி ரிஷபம் ராசி பலன்:

சனி பகவான் தனது சொந்த நட்சத்திரமான உத்தர பாத்ரபாத நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆகும் நிலையில் ரிஷப ராசிக்கு சாதகமான பலனை கொடுக்கும். உத்தர பாத்ரபாத நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகும் சனி பகவான் ரிஷப ராசியினருக்கு 11ஆவது வீட்டில் அமர்ந்து ஏராளமான நன்மைகளை தர போகிறார். வேலையிலுள்ள சிக்கல்கள் தீரும். புதிதாக வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் எதிர்பார்க்கலாம். குழந்தைகளிடமிருந்து நல்ல செய்தி வந்து சேரும். வெளியூர், வெளிநாடு சென்று வரலாம். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம், தொழில் விரிவடையும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையில் ஒற்றுமை அதிகரிக்கும்.

46

சனி நட்சத்திர பெயர்ச்சி மிதுனம் ராசி பலன்:

உத்தர பாத்ரபாத நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகும் சனி பகவான் மிதுன ராசியினருக்கு 10ஆவது வீட்டில் அமர்ந்து யோகமான பலன்களை கொடுப்பார். 10ஆவது வீட்டில் அமர்வதால் வாழ்க்கையில் எல்லையில்லா மகிழ்ச்சி உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரிகளின் பாராட்டுக்களை பெறுவீர்கள். உங்களுக்கு முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வெற்றிகள் தேடி வரும் யோகமான காலகட்டம்.

56

சனி நட்சத்திர பெயர்ச்சி கும்பம் ராசி பலன்:

உத்தர பாத்ரபாத நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகும் சனி பகவான் கும்பம் ராசியினருக்கு 2ஆவது வீட்டில் அமர்வது சிறப்பானதாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கையில் வெற்றியை நோக்கி உங்களது பயணம் இருக்கும். புதிய புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நீங்கள் செய்யும் வேலைக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வண்டி, வாகனம், நிலம், சொத்து வாங்கும் எண்ணம் மேலோங்கும்.

66

உத்தர பாத்ரபாத நட்சத்திரத்தின் சிறப்பு என்ன?

உத்தர பாத்ரபாத நட்சத்திரம் சனியால் ஆளப்படுகிறது மற்றும் நட்சத்திரங்களின் பட்டியலில் இது 26 வது இடத்தில் உள்ளது. நீர் ராசியைச் சேர்ந்தது. இந்த நட்சத்திரத்தின் சிறப்பு பலன் என்னவென்றால் மனநல மருத்துவர்கள், டாக்டர்கள், துறவிகள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் நடத்துபவர்கள் தான் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories